உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவம் தாக்கல் செய்ய மார்ச் 31 கடைசி

புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவம் தாக்கல் செய்ய மார்ச் 31 கடைசி

மதுரை : ''2021 - 22 ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்ய மார்ச் 31 கடைசி,'' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை, அதிக வருமான வரி திரும்பக்கோரும் (ரீபண்ட்) கோரிக்கைகளை ஆய்வு செய்தது. சிலர் வழக்கத்திற்கு மாறாக வருமான வரிச்சட்டப் பிரிவு 80 ஜியின் படி (நிதி, தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடை), 80 இ யின்படி (கல்விக் கடனுக்கான வட்டி), பிரிவு 80 ஜிசிசியின் (அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் பங்களிப்பு) படி பெறும் வரிவிலக்குகளை தங்கள் 2021 - 22, 2023 - 24 ஆண்டுக்கான வருமான வரிப்படிவத்தில் கோரி உள்ளனர். இவ்வாறு வரி செலுத்துவோர் சிலர் தங்கள் மொத்த வருவாயில் 80 சதவீதத்திற்கும் கூடுதலான வருமானத்தை வரிவிலக்காக கோரியுள்ளனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களில் பலராலும் வரிச்சலுகை கோரியதற்கான ஆதாரங்களை வழங்க முடியவில்லை. இச்சூழலில் 1.4.2022 முதல் வருமான வரிச்சட்டப் பிரிவு 139 (8ஏ)-ன் கீழ் வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரிப்படிவங்களை தாக்கல் செய்ய கடைசி தேதி முடிந்த பின்னரும், கூடுதல் வரியை செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பிரிவின் கீழ் வரிசெலுத்துவோர், அந்தாண்டுக்கு தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் விடுபட்ட வருமானம் அல்லது பிழைகளை சரிசெய்ய முடியும். வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்யும்போது ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், வரிசெலுத்துவோர் அதை சரிசெய்து, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் அப்பிழைகளை திருத்திக் கொள்ளலாம். மதிப்பீடு ஆண்டு 2021 - 22 க்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்ய கடைசி தேதி 31.3.2024. இத்தகவலை கூடுதல் வருமான வரி ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை