உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: தூத்துக்குடியில் அமைய உள்ள கப்பல் கட்டும் தளத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடியில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளதாகவும் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என தெரிவித்துள்ளீர்கள். கப்பல் கட்டும் தளம் அமைய உள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த 90 ஆண்டுக்கு மேலாக உப்பு உற்பத்தி யில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அது இருக்கக்கூடாது.கப்பல் கட்டும் தளம் முள்ளிக்காட்டு பகுதியில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவதுடன், ஒரு லட்சம் பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். உப்பளங்கள் உள்ள இடங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் அந்த நிலங்கள் வழியாகத்தான் குளங்களில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் வெள்ள நீர் கடலில் சென்றடைகிறது. அந்த வடிகால் இல்லாவிடில் சுற்றியுள்ள குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து பேரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.முள்ளிக்காடு பகுதியில் உள்ள உப்பு உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அப்பகுதியை கையகபடுத்துவதை கைவிட்டு, தூத்துக்குடி வடக்கு வைப்பாறு கிராமத்தில் உள்ள 1200 ஏக்கரையும், கடற்கரையை ஒட்டியுள்ள தரிசு நிலங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள 2000 ஏக்கர் தரிசு நிலங்களையும் கப்பல் கட்டும் தளம் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ள அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சண்முகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mani . V
செப் 23, 2025 04:03

ஏன் திமிங்கிலம், அந்த மாற்று இடம் ஏன் புதுக்கோட்டையாக இருக்கக் கூடாது? அங்கு கடல் இல்லையென்றால் என்ன? ஏதாவது ஒரு குளக்கரையில் கட்டுவோம்.


panneer selvam
செப் 23, 2025 00:11

Government has announced any location for the projects . In fact the project promoters Cochin shipyard and Mazagon shipyard did not make any announcement on these projects so far . Let us know the location first before we discuss


N S
செப் 23, 2025 00:09

மதுரை, ராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை பரிந்துரை செய்யலாம். மக்கள் வாழ்வாதாரம் மேன்மையடையும். கப்பலை கட்டி கடலுக்கு எடுத்து செல்வதால் தொழில் வளர்ச்சி பெறுக வாய்ப்புள்ளது.


சிட்டுக்குருவி
செப் 22, 2025 22:15

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே கருத்துப்பரிமாற்றம்தான் .ஒவ்வொருவருக்கும் கருத்துசொல்லஉரிமையுண்டு .இவ்வளவு பெரிய தொழில்கள் துவங்குமுன் கருத்துருக்கேட்டால் பிற்காலங்களைளவரக்கூடும் இன்னல்களை இப்போதே தவிர்க்கலாம் .லக்ஷ்க்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என்னும்போது,அவர்கள்தொழிலால் உற்பத்திபாத்துக்கும் என்னும்போது மாற்று இடத்தை பரிசீலித்தல் அவசியமே .சில மைல் தூரம் தள்ளி போவதால் கப்பல் காட்டும் தொழில் ஒன்றும் பாதிக்காது .ஆனால் ஒன்று நைனா பேரு வைக்காமல் கப்பல் ஒட்டிய தமிழர் வா ஊ சிதம்பரானார் பெயர்வைக்கவேண்டும் .அவர் நினைவாக ஒருகாட்சியகத்தையும் வரலாற்றையும் காட்சி படுத்தவேண்டும் .இதை எல்லா தமிழ் அன்பர்களும் கோரிக்கையாகவைக்கவேண்டும் .


Kanakala Subbudu
செப் 22, 2025 21:01

ஏதாவது திட்டம் கொண்டு வந்தால் உடனே ஒரு முட்டுக்கட்டை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு கட்சி என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சி தான்


Shunmugham Selavali
செப் 22, 2025 22:24

வரவேற்க்க வேண்டிய நல்ல கருத்து. மாற்று இடத்தில் செயல் படுத்துவது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை