உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன் பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (ஜூலை 01) தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் தரைமட்டமாகின. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qt0y8pcd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ரூ. 4 லட்சம் நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4லட்சமும், காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சமும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sudha
ஜூலை 01, 2025 17:16

கருணை இல்லா நிதியுதவி ஸ்டாலின் எனும் தொழிலாளியின் பெயருக்கு களங்கம் விடிய விடிய சோகங்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 01, 2025 15:24

இதுக்குத்தான் பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளை சுற்றி, உடம்பில் கரண்ட் ஓடும் மனிதர்கள் நடமாட்டத்தை தடைசெய்யவேண்டும் .மீறி யாராவது மறந்து சென்றால் அவர்களை கண்டதும் சுட வேண்டும்


Ramesh Sargam
ஜூலை 01, 2025 12:14

இப்படி விபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துகொண்டுதான் இருக்கிறது தமிழகத்தில். அதிகாரத்தில் உள்ளவர்கள் மாமூலை வாங்கிக்கொண்டு பாதுகாப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் ஆலை நடத்த அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். பிறகு விபத்து ஏட்படாமல் வேறென்ன நடக்கும்?


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 11:59

இந்தாண்டின் ஏழாவது பட்டாசு விபத்து என நினைக்கிறேன். ஸ்டெர்லைட் டால் விபத்து ஆபத்து எனக் கூவிய ஸ்டாலினுக்கு வாக்களித்தால் நிரந்தர விபத்து.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 01, 2025 10:57

எங்கய்யா நம்ம மாடல் மந்திரி?


veeramani
ஜூலை 01, 2025 10:28

CSIR- சென்ட்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரெசெர்ச் இன்ஸ்டிடியூட், காரைக்குடி விஞ்ஞானியின் எச்சரிக்கை.. விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலகங்களில் வெடிமருந்து சேமிப்பு, பட்டாசு புனையும் கட்டிடங்கள் கண்டிப்பாக அரை வட்ட கோலம் சரிபாதி பந்து வடிவத்தில் கட்டப்பட்டு கதவுகள் அலுமினியம் அல்லது மரத்தினால் பொறுத்தப்படவேண்டும் . இதனால் ரசாயன மாற்றங்களினால் வெடிமருந்து வெடிக்கு ஒத்து கட்டிடம் இடியாது தொழிலார்கள் உயிருக்கு சேதம் ஏற்படாது . பசும் பட்டாசுகளை தயாரிக்க சிவகாசி மக்களை கண்டிப்பாக மாறச்சொல்லுங்கள்.


Svs Yaadum oore
ஜூலை 01, 2025 12:41

இது போன்ற விபத்துகள் காலம் காலமாக நடந்துகொண்டுள்ளது ... இதுவரை என்ன செய்தார்கள்?? PESO என்ன செய்துகொண்டுள்ளது ?....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை