உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவலைக்குரிய விஷயம்: கள்ளச்சாராய பலி குறித்து கவர்னர்

கவலைக்குரிய விஷயம்: கள்ளச்சாராய பலி குறித்து கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் கவலைக்குரிய விஷயம்'' என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலி சம்பவம் குறித்து, தமிழக கவர்னர் ரவி, சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயம். இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Vijay D Ratnam
ஜூன் 20, 2024 16:12

கவலைக்குரிய விஷயமாம். இத சொல்றதுக்கு எதுக்கு கவர்னர். ,பெண்களுக்கு பாதுகாப்புங்குற பேச்சுக்கே தமிழகத்தில் இடமில்லை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கள்ளச்சாராய சாவுகள், தினசரி நடக்கும் படுகொலைகள் இதை காரணம் காட்டி இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஆறு மாத காலத்துக்கு கவர்னர் ஆட்சியை அமல் படுத்துவதை விட்டுவிட்டு கூட சேர்ந்து கவர்னர்.


Vathsan
ஜூன் 20, 2024 15:51

அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யலாமே. ஆளுநராக என்ன செயதீர்


P. SRINIVASALU
ஜூன் 20, 2024 15:31

பிஹாரில் பாலம் இடிந்து வியிந்தப்போ எங்கே போனாரு


தமிழன்டா
ஜூன் 20, 2024 13:39

அரசு அதிகாரிகளை மட்டும் பணியிடை மாற்றம், பணியிடை நீக்கம் செய்யும் அரசு ஏன் இதற்க்கு முதற்காரணமான அரசியல் வாதிகளை தண்டிக்க தவறுகிறது அரசியல்வாதிகளின் தயவோடு தான் இத்தகய செயல்கள் நடக்கிறது என்பது யாவரும் அறிந்ததே அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்து குற்றவாளிகளை தப்ப செய்வதே அரசியல் வாதிகள் அவர்களே முதல் குற்றவாளிகள்


venugopal s
ஜூன் 20, 2024 12:50

வெறும் வாயை மெல்லுபவருக்கு அவல் கொடுத்து விட்டார்கள்!


Barakat Ali
ஜூன் 20, 2024 13:03

குறைந்த பட்சம் எப்பொழுதாவது ஆளும் தரப்பின் தவறுகளுக்கு / அழிச்சாட்டியங்களுக்கு வெட்கப்படுங்கள்.. ஆதரவு கொடுக்கிறோமே என்று மனம் வருந்துங்கள் .....


hari
ஜூன் 20, 2024 13:10

குடித்து செத்துவர்களுக்கு 10 லட்சமும் போட்டாச்சா... நம்ம முட்டு வேணுவுக்கு எதாவது கமிஷன் குடுங்கப்பா.....


GMM
ஜூன் 20, 2024 14:11

சட்ட விரோத மது தயாரிப்பு. உள்ளூர் போலீசார் அமுல்படுத்த முடிவது இல்லை? அரசியல் குறுக்கீடு அதிகம். உறவு முறை பணிகள். செயல்படுத்த முடியாதவர்களிடம் மீண்டும் அதிகாரம் கொடுத்து பயன் இல்லை. மாநில போலீசார் கவர்னர், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நேரடி தொடர்பு குறையும். ஆட்சி காலத்தில் எந்த சட்ட விரோத தவறையும் சீர் செய்ய முடியவில்லை. நிவாரணம் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு. சட்டத்தை அமுல்படுத்தும் நீதிமன்றத்தில் வழி காண முடியும்.


karthic
ஜூன் 20, 2024 12:50

இது தெரிந்தேதான் நடந்திருக்கு .... லோக்கல் போலீஸ் எல்லோருக்கும் இது தெரியும் .. எல்லாமும் ளஞ்சம் ...


mothibapu
ஜூன் 20, 2024 11:52

இதையும் மத்திய அரசே தம் கட்டுப்பாட்டில் வைத்து விட்டால் நல்லது. அவர்களும் நாலு காசு அதிகம் paarkalaam.


விடியலை நோக்கி
ஜூன் 20, 2024 11:27

நாளை நமதே 234 லும் நமதே


hari
ஜூன் 20, 2024 11:00

இவளோ நாள் கோமாவுல இருந்தியா


venugopal s
ஜூன் 20, 2024 10:52

இதற்குப் பெயர் தான் சந்துல சிந்து பாடுவதா?


hari
ஜூன் 20, 2024 10:59

அதுதானே நீ என்னைக்கு முட்டு குடுக்காம இருந்திருக்கே வேணுகோபால்.... கேப்போம்.. ஒரு தமிழ் மக்களும் கேப்போம்.... சரியான 200 ரூபாய் உபிஸ்


hari
ஜூன் 20, 2024 11:45

பாருப்பா.... பொந்ததுல இருந்து ஒரு முட்டு பேசுது


Barakat Ali
ஜூன் 20, 2024 13:06

மக்களின் அதிகாரத்தைப் பெற்று ஆட்சியில் இருப்பவர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தட்டிக்கேட்பதா என்று குதிப்பீர்களே? இதுதான் அவரது பணி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் லட்சணம் இப்படியென்றால் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை உள்ளது..


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ