மேலும் செய்திகள்
ஐகோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய தாமதம்
41 minutes ago
ஏஐ குறித்த ஐநா சர்வதேச குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர்
2 hour(s) ago | 4
யார் காட்டுமிராண்டி: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
2 hour(s) ago | 2
சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சென்னையில் துவங்கியது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் துவங்கியது. முதல் கட்ட கவுன்சிலிங்கின் முடிவில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 5 இடங்கள், 11 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 778 இடங்கள், பி.டி.எஸ்., படிப்பில், அரசு பல் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 73 இடங்கள் மற்றும் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 847 இடங்கள் ஆகியவற்றுக்கு இக்கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 'இன்றைய கவுன்சிலிங்கில், அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக இருந்த 5 இடங்கள் மட்டும் நிரப்பப்பட்டன. மீதியுள்ள இடங்களுக்கு அடுத்த மாதம் 4ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கும்' என, மருத்துவக் கல்லூரி கூடுதல் இயக்குனர் ஷீலா கூறினார்.
41 minutes ago
2 hour(s) ago | 4
2 hour(s) ago | 2