உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டம் துவக்கம்; முடிவில் மாற்றம் இல்லை என்கிறார் துரை வைகோ

ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டம் துவக்கம்; முடிவில் மாற்றம் இல்லை என்கிறார் துரை வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது. ''கட்சி பொறுப்பில் இருந்து விலகிய என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை'' என துரை வைகோ நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது. ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். துரை வைகோ விலகல் குறித்து நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கருத்தும் கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vo4fibva&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராஜினாமா நான் கொடுத்தது தான். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நிர்வாகிகள் தங்கள் கருத்தை தலைமையிடம் பிரதிபலிக்கட்டும். ராஜினாமா குறித்து கட்சி மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். காரணம் குறித்து அறிக்கையில் தெளிவாக கூறியிருக்கிறேன். ம.தி.மு.க.,தான் வைகோ, வைகோ தான் ம.தி.மு.க., இதில் எந்த மாற்றமும் கிடையாது. என்னால் கட்சிக்குள் எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். கட்சிக்குள், எதனால் பிரச்னை வந்தது என்பது நிர்வாகக்குழு கூட்டத்திற்குப்பின் தெரியும். கட்சியை யாரும் இழிவுபடுத்தாதீர்கள் என்பது தான் எனது அறிவுறுத்தல். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RAMESH
ஏப் 20, 2025 18:05

ஜெ விடம் பைசா பெற்று கொண்டு சில காலம்... அன்று கேவலமாக பேசி ஸ்டாலினை திட்டி விட்டு... இன்று அவர் பின்னால்....மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் என்ற தைரியம்


RAMESH
ஏப் 20, 2025 18:05

ஜெ விடம் பைசா பெற்று கொண்டு சில காலம்... அன்று கேவலமாக பேசி ஸ்டாலினை திட்டி விட்டு... இன்று அவர் பின்னால்....மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் என்ற தைரியம்


V Venkatachalam
ஏப் 20, 2025 16:22

பணம் படுத்தும் பாடு.. பணத்தை மடை மாற்றம் செய்வதற்கு மல்லை சத்யா ஒத்துக்கொள்ள வில்லை. இதுதான் விஷயமே. ரொம்பவே சிம்பிள்.


Sivagiri
ஏப் 20, 2025 14:31

வேற வழி தெரியல நைனா.. நம்மள யாரும் கண்டுக்க மாட்றாங்க... என்ன செய்ய, நாமளா எதாவது டிராமா கூத்து ஏதாவது பண்ணினாலாவது, மீடியா நம்ம பக்கம் கொஞ்சம் திரும்புமான்னு பாக்கலாம் . . .


vijai hindu
ஏப் 20, 2025 13:47

ரெண்டு பேரு இருக்க கட்சிக்கு பந்தா எதுக்கு


jaga
ஏப் 20, 2025 12:00

நீங்க ஒரு தத்தி, உங்கப்பா ஒரு தத்தி


பிரேம்ஜி
ஏப் 20, 2025 12:00

மதிமுக தான் வைகோ! வைகோ தான் மதிமுக! துரை வைகோ வின் மகன் தான்! ஓகே! என் கேள்வி! மதிமுக இன்னும் இருக்கிறதா?


V Venkatachalam
ஏப் 20, 2025 15:06

அதில் இருக்கும் பணத்தை பங்கு போடும் வரைக்கும் கட்சி இருக்கும்.


hariharan
ஏப் 20, 2025 11:58

கட்சிப் பதவியில் இருந்த அனைத்து பதவிகளிலிருந்து ராஜினாமா செய்த பிறகு நிர்வாகக் குழு கூட்டத்தில் இவருக்கென்ன வேலை?


பிரேம்ஜி
ஏப் 20, 2025 11:56

திணிக்கப்பட்ட வாரிசுக்கு இவ்வளவு திமிர் இருந்தால், உழைத்து மேலே வந்த மனிதன் மல்லை சத்யாவுக்கு எவ்வளவு திமிர் இருந்தாலும் தகும். உன் அப்பா ஏன் இன்னும் அவரைக் கட்சியை விட்டு நீக்காமல் வைத்திருக்கிறார்? அவரிடம் இருந்து வீராப்பு பேச்சு வீடியோ அறிக்கையும் வரவில்லை! மர்மமாகவே இருக்கிறது!


Nagarajan D
ஏப் 20, 2025 11:55

அப்படியே பொட்டி கோவலையும் ராஜினாமா செய்துட்டு கம்பெனிய மூட சொல்லு