வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மினி பஸ் சர்வீஸ். worst சர்வீஸ்.
இண்டிகோ .. இந்தியாவின் பெயரை கெடுக்கும் விமானம்.
தினமும் இதே செய்தியாகி விட்டது.
குறைந்த கட்டணம் என்று ஓட்டை உடைசல் விமானங்களை வைத்து விமான நிறுவனம் நடத்துவது பயணிகளுக்கு ஆபத்து...
சென்னை: சென்னையிலிருந்து 148 பயணிகளுடன் அந்தமான் சென்ற இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால், மீண்டும் சென்னையில் அவசரகதியில் தரையிறக்கம் செய்யப்பட்டது.சென்னையிலிருந்து இன்று (டிச.,21) காலை 10.30 மணிக்கு 148 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்டதும் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விமானம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் அதே விமானத்திலோ அல்லது வேறு விமானத்திலோ பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மினி பஸ் சர்வீஸ். worst சர்வீஸ்.
இண்டிகோ .. இந்தியாவின் பெயரை கெடுக்கும் விமானம்.
தினமும் இதே செய்தியாகி விட்டது.
குறைந்த கட்டணம் என்று ஓட்டை உடைசல் விமானங்களை வைத்து விமான நிறுவனம் நடத்துவது பயணிகளுக்கு ஆபத்து...