உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு; ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்

மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு; ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், முன்கூட்டியே விடுதலை கோரும் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுஉள்ளது.சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர், அண்ணாமலை பல்கலையில் மருத்துவம் படித்தார். இவரை, 1996ல் சீனியர் மாணவர் ஜான் டேவிட், துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார்.இந்த வழக்கை விசாரித்த கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக 1 லட்சம் ரூபாயும் விதித்து, 1998ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜான் டேவிட்டை விடுதலை செய்து, 2001 அக்டோபர் 5ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காவல் துறை மேல்முறையீடு செய்தது.கடலுார் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் 2011 ஜன., 20ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜான் டேவிட் மீண்டும் சிறை சென்றார்.இந்நிலையில், ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரின் தாய் டாக்டர் எஸ்தர் மனு தாக்கல் செய்தார்.மனு விபரம்:மகன் ஜான் டேவிட் 10 ஆண்டுகள் வெளியில் இருந்த போது, உளவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்; ஊட்டச்சத்து படிப்பையும், எம்.பி.ஏ., பட்டப் படிப்பையும் முடித்து விட்டார். வெளியில் இருந்த காலத்தில், யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை; அமைதியாக வாழ்ந்தார். தற்போது, அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய, அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ல் அரசாணை பிறப்பித்தது.கடந்த ஆண்டு வரை, 16 ஆண்டு 11 மாதம் சிறையில் இருந்துள்ளார். அரசாணையில் கூறப்பட்டுள்ள அனைத்து தகுதிகள் இருந்தும், மகனை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் பரிந்துரையை கவர்னர் நிராகரித்துள்ளார்.கைதியை முன்கூட்டியே விடுதலை செய்ய, அவரின் குற்றச் செயல்களை பார்க்கக் கூடாது.தற்போது அவர் திருந்தி, நல்ல எண்ணத்துடன் அமைதியாக வாழ்கிறாரா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். எனவே, என் மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனோகரன் ஆஜராகி, ''ஜான் டேவிட் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. நாவரசு கொலை வழக்கில் அவர் கைதான போது, 18 வயது தான்,'' என்றார்.இதையடுத்து நீதிபதிகள், 'ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து, அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அதுவரை ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமின் வழங்குகிறோம்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

raja
அக் 28, 2024 19:48

கொஞ்ச நாளைக்கு முன்னாடித்தான் மதப்போதகர் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்று செய்தி வந்தது?? ஆனால் ஒன்று மனுஷனை மனுஷன் துண்டு துண்டா வெட்டும் அளவுக்கு வெறி இருந்தால் அவன் மனுஷனாவே இருக்க முடியாது இவனை எல்லாம் உயிரோடு விட்டதே தவறு இதுலவேற முன்கூட்டியே விடுதலை இவன் நாவரசை கொன்னதுக்கு பதிலா இவன் அம்மாவையே கொன்னு இருந்தா ஜாமீன் கேட்டு வர ஆள் இருக்காதில்ல கொலைகார மகனை பெற்றோம் என்று இந்த அம்மாவே செத்துருக்கணும்.... எங்க நம்ம நாட்டில் சட்டமும் சரி இல்லை அரசுகளும் சரியில்லை பாவப்பட்ட மக்கள்தான் பாவம்


Lion Drsekar
அக் 27, 2024 12:15

முன்பு வெளிவந்த செய்தி இவர் மதபோதகர் ஆகிவிட்டார் வெளிநாட்டில் ஊழியம் செய்கிறார் என்று , ஆனால் இப்போது இப்படி ஒரு செய்தி, எப்படியோ இவர் இப்போது நல்லவராகிவிட்டார் என்பது அவரது அம்மாவே கூறிவிட்டார் , வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


shakti
அக் 26, 2024 14:13

கிறிஸ்தவ ஆட்சி . இவனும் கிறிஸ்தவன் .. ஆகவே வெளிவருவதில் பிரச்சினை இருக்காது .. செத்தவன் குடும்பத்தினர் மனநிலையை யார் கேட்பது ???


Natchimuthu Chithiraisamy
அக் 26, 2024 11:14

நன்னடத்தை விதிகள் பின்பற்றியுள்ளார் என்று ஜாமீன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் இருந்தவனை பிடிக்க காவல் துறை தண்ணீரில் தவம் இருந்தது கோர்ட்டு கவனத்திற்கு வரவில்லை அதற்க்கு பணம் பரிசு வந்ததாக


Natchimuthu Chithiraisamy
அக் 26, 2024 11:08

நீதி துறையே நீ நீதியாக இருக்கிறீயா ? ஒரு துணை வேந்தர் மகனை துண்டு துண்டாக வெட்டி ஸூட்கேஸில் போட்டு கொன்றுவிட்டு வெளியில் வாழ்ந்து கொண்டு காலம் முடிந்து விட்டது இனி விடுதலை வேறு. நாட்டில் ஏழாவது கொலை செய்தான் என்று செய்தி வருகிறது என்றல் அதற்க்கு யார் காரணம் நீதி துறை தான் மக்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்கு தான் நீதி துறை இருக்கிறது. அங்கு வேலை செய்ய சோறு காசு கிடைக்கிறது. ஏன் உன் குடும்பம் வாரிசு அழிய சொத்தை நீதி துறையில் சேர்க்கிறாய். அழிவு உறுதி.


Yuvaraj Velumani
அக் 25, 2024 19:48

இவன அப்பவே தூக்கில் போடாமல் இருந்தது நீதித்துறை தவறு. பணம் பத்தும் செய்யும்.


வேலுச்சாமி தேவர்
அக் 24, 2024 12:42

செய்த குற்றத்தை கருத்தில் கொள்ளாமல் இப்பொழுது அவன் நன் நடத்தையை கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டுமாம் இது என்ன விடுதலை பெற புதிய . வழி முறைக்கு வழிவகுக்கும் இப்படியே போனால் தனக்கு பிடிக்காத எவரையும் கொலை செய்து விட்டு சிறைக்கு உள்ளே சென்று நன்நடத்தை என்று நாடகம் ஆடிவிட்டு எனக்கும் விடுதலை வேண்டும் என்று தொடங்கி விடுவார்கள் தனது ஆட்டத்தை


S.Martin Manoj
அக் 24, 2024 09:32

இங்கே கருத்து எழுதும் பாதிபேர் கௌரிலங்கேஸ் கொலை வழக்கில் ஜாமீன் கிடைதவர்களையும் கர்ப்பிணி பெண் பில்கிஸ்பானு கற்பழிப்பு வழக்கில் விடுதலை ஆனவர்களை கொண்டாடும் மத தீவிரவாத கூட்டம் இவர்களுக்கு இந்த இங்கு கருத்து கூற எந்த யோக்கியதையும் இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 11:53

வரலாறு சொல்வது என்ன ???? பாலைவன மதங்கள் படுகொலைகளை நிகழ்த்தித்தான் வளர்ந்தன .....


Raa
அக் 28, 2024 16:15

மார்ட்டின் மனோஜ் - நீங்கள் டாக்டருக்கு படித்திருந்தால், வலது காலை பார்த்து இடது காலுக்கு ஆபரேஷன் செய்வேன் என்று சொல்வது போல உள்ளது. ஒரு குற்றம் பற்றி பேசும்போது மற்ற குற்றம் பற்றி சொல்ல என்ன தேவை வந்தது? முட்டு கொடுப்பதற்கு ஒரு அளவு வேண்டாமா?


Tetra
அக் 24, 2024 07:15

இதை விட கேவலம் ஒன்றுமில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 22:17

அண்ணா பிறந்தநாள் காரணமாக விடுதலையா அல்லது ஜாமீனில் வருகிறாரா ???? வெளியே வந்து குடும்ப கட்சியின் ஒரு வேட்பாளராக நின்றால் ஒட்டு போடுகிறவர்கள்தான் நம் சனங்க .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை