உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரம்: 2 பேர் சிக்கினர்

நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரம்: 2 பேர் சிக்கினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: நெல்லையில், கேரள மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் தலைமை ஏஜென்ட் ஆக செயல்பட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதையடுத்து, சுத்தமல்லி போலீசார் புதிய குற்றவியல் சட்டம் 271, 272 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில், தலைமை ஏஜென்ட் ஆக செயல்பட்ட சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர்(51), மாயாண்டி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் கூறியுள்ளார். லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு கழிவுகளை கொட்டியதும், இதற்கான இடங்களை இவர்கள் அடையாளம் காட்டியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Sankare Eswar
டிச 20, 2024 12:43

ஆய்வாவது ...... வது ... திருட்டு விடிய மொடல் நாடகம்


வெங்கடேஷ் குமார், Pollachi
டிச 20, 2024 05:43

இவை வாகனங்களில் வந்தது என்றால் இங்குள்ள சுங்கச்சாவடியை கடந்து தானே வந்தது. அந்த சுங்கச்சாவடி அதிகாரிகளை எப்போது கைது செய்யப் போகிறோம்.. இதை அனுப்பிய நிறுவனத்தை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்


தாமரை மலர்கிறது
டிச 20, 2024 00:55

தமிழக மருத்துக்கழிவுகளை கேரளாவில் கொண்டுபோய் கொட்டுங்கள். அப்போதுதான் சேட்டன்களுக்கு புத்தி வரும்.


Naagarazan Ramaswamy
டிச 19, 2024 22:33

This dumping has been reported for over sevetal years. Then why is our State govt. not taking any action with Kerala Govt?


K.n. Dhasarathan
டிச 19, 2024 22:02

அந்த இரண்டு பெரும் வெறும் அம்புகள்தான், எய்தவர்களை பிடிக்க வேண்டும், முதலில் எல்லையில் இருக்கும் செக் போஸ்ட் என்ன செய்கிறார்கள்? சும்மா அவர்களை இடம் மாற்றம் செய்தல் கூடாது அந்த போலீஸ்காரர்கள் வீட்டிலே மருத்துவ கழிவுகளை கொட்டுங்கள். அடுத்து சம்பந்தப்பட்ட ஆச்பிடல் வாசலில் இன்னொரு லாரி மருத்துவ கழிவுகளை கொட்டுங்கள், இதைவிட்டு வேறு எந்த தண்டனை கொடுத்தாலும், அபராதம் போட்டாலும் எளிதாக தப்பிக்க வழியாகிவிடும், செய்வார்களா ?


நிக்கோல்தாம்சன்
டிச 19, 2024 21:13

இரு திராவிடர்கள் ?


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 19, 2024 19:23

மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்லுங்கள் 3 நாட்கள் கெடு விதித்தது பசுமை தீர்ப்பாயம் - பிடிபட்ட இருவரையும் யாருடைய உதவியும் இன்றி எல்லா முட்டைகளையும் ஒவ்வொன்றாக எடுத்து லாரியில் ஏற்றும் வேலையை முதலில் கொடுக்கவேண்டும். கோர்ட், கேஸ், தண்டனை எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.


Padmasridharan
டிச 20, 2024 04:44

அது "மு"ட்டைகள் இல்லீங்கோ .. "மூ"ட்டைகள்.. ?ஒரு தடவைக்கு பல தடவ எழுதினத படிச்சு சரியா post பண்ணுங்கோ??


வைகுண்டேஸ்வரன் V
டிச 19, 2024 19:17

பசுமைத் தீர்ப்பாயம் ஒன்றிய அரசின் கீழே தான் இயங்குகிறது. அங்கே போய் சொல்லுங்க


rama adhavan
டிச 19, 2024 20:56

கொட்டிய இடம் தமிழ்நாடு மண். அப்போ இந்த அரசின் பொறுப்பு, கடமை என்ன என்றும் சொல்லவும்.


Gokul Krishnan
டிச 19, 2024 21:53

கேரளாவுக்கு போய் பின ராய் விஜயனுடன் சேர்ந்து போஸ் கொடுக்க நேரம் இருக்கு சிலை திறக்க நேரம் உள்ளது ஆனால் இது பற்றி வாய் திறக்க திருட்டு திராவிட அரசுக்கு நேரம் இல்லை


வல்லவன்
டிச 19, 2024 19:13

இளிச்சவாயன் மாயாண்டி, பேய்யாண்டி. அல்லக்கை அப்ரன்டிஸ் போலீஸ்கு நிஐமா கொட்னவன புடிக்க துப்பில்லை


Sivagiri
டிச 19, 2024 19:01

அடுத்த மாநிலத்து , குப்பைகளை தடுக்க முடியவில்லை - இங்கே இருந்து மணல் கொள்ளை அடித்து செல்வதை தடுக்க முடியவில்லை - - பெரியாறு டேம்-இல் ஒரு , ரிப்பேர் வேலை செய்ய செல்ல முடியவில்லை - - பக்கத்து மாநிலத்து , அதுவும் கூட்டணி கட்சி அடாவடிகளை கூட தடுக்க முடியவில்லை - - அகில இந்தியாவே இவர்கள் ஆட்சி மாடலை பார்த்து பின்பற்றுகிறார்களாம் - - இவர்கள் பிரதமர் பதவிக்கு குறி வச்சாங்க - இருக்கிற எம்பிக்களே - டில்லிக்கு போயி ஒரு ஆணியும் பிடுங்க லாயக்கில்லை - இவர்கள் போயி அகில மாநிலங்களை அகில இந்திய மாநில மக்களை காப்பாற்ற போறாங்களாம் . . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை