உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் நடத்திய ‛‛மெகா சர்வே : இன்று விறுவிறுப்பான முடிவுகள்

தினமலர் நடத்திய ‛‛மெகா சர்வே : இன்று விறுவிறுப்பான முடிவுகள்

எத்தனையோ தேர்தல்களில் எத்தனையோ நிறுவனங்கள் தேர்தல் சர்வேக்களை நடத்தி இருக்கலாம். ஆனால், இம்முறை நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலுக்காக தினமலர் நடத்திய சர்வே பிரமாண்டமானது.சில தொகுதிகளுக்கு மட்டும் சென்று ஓரிருவரை மட்டும் பார்க்காமல், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர், அரசு அதிகாரிகள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், வசதி உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரையும் பிரதிநிதிப்படுத்துவது போல் சர்வே எடுத்துள்ளோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3aq26mx3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொத்தம் நாங்கள் பேசிய வாக்காளர்கள் 86 ஆயிரம் பேர். சென்ற ஊர்கள் 3 ஆயிரம் பஞ்சாயத்துகள், தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகள். இவை அனைத்திற்கும் நாங்கள் பல்வேறு குழுக்களாக சென்று வாக்காளர்களிடம் பேசி விபரங்களை சேகரித்துள்ளோம்.வாக்காளர்களின் விருப்பம் என்ன?தி.மு.க., எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்?கூட்டணி இல்லாத அ.தி.மு.க.,விற்கு பலம் இருக்கிறதா?எந்த கட்சிக்கு இரண்டாம் இடம்?அண்ணாமலை கரை சேர்வாரா?மாதம் ரூ.1000 உதவித் தொகை, இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்கள் திமுக கூட்டணிக்கு ஓட்டுகளை பெற்றுத் தருமா போன்ற ஏராளமான கேள்விகளைக் கேட்டு முடிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் நாங்களே எதிர்பாராத வகையில் பரபரப்பாக அமைந்துள்ளன. இவற்றின் முழு விபரங்கள் இன்று ( ஏப்.,15) முதல் 17 ம் தேதி வரை உங்கள் தினமலர் நாளிதழில் தேர்தல் களம் பகுதியில் வெளி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kachada
ஏப் 15, 2024 07:41

ஆகமொத்தம் EVM மேல பழி போட மனசுல தயார் ஆயிட்டேன்னு சொல்லு வெரி குட் இ லைக் தட்


sara
ஏப் 15, 2024 06:06

நீ என்ன உருட்டு உருட்டுவேன்னு எல்லாருக்கும் தெரியும் பிஜேபி 39 தமிழ்நாட்டில் இந்தியாவில் 543 இது தானே நீ சொல்லப்போற இதுக்கு ஏன் இவ்வளவு பில்டப் சங்கீ பத்திரிக்கையில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்


Kasimani Baskaran
ஏப் 15, 2024 05:37

வெற்றிக்கனியை பணம் கொடுத்து பறித்துக்கொள்வது திராவிடியல் மாடல் அது ஓரளவுக்கு வேலை செய்திருக்கிறது என்பதும் உண்மை ஆகவே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றுதான் சொல்லப்படுகிறது ஆனால் இதுவரை வாக்குச்சாவடிக்கு போவதை தவிர்த்தவர்கள், இளைஞர்கள் போன்றோர் பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது ஆகவே பாஜகவின் வாக்கு வங்கி பெரிய அளவில் அதிகரிக்கும் தகுதிபெறாத மகளிர் நிச்சயம் தீம்காவுக்கு ஓட்டுப்போடப்போவது இல்லை என்பதையும் பலர் சொல்கிறார்கள் செபா உத்தமர் என்ற தீம்காவின் வாதம் தீம்காவினர்களுக்கே பிடிக்கவில்லையாம் ஆக பாஜக உள்ளே வந்துவிட்டது கணக்கை தொடங்கியதை உறுதி செய்தால் தமிழகத்தில் ல் கனிசமான சட்டசபை தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உண்டு


Ravichandran C
ஏப் 14, 2024 21:17

திமுக தோற்கடிக்கபட வேண்டும்


N.Chinnachamy
ஏப் 14, 2024 19:23

பிஜேபியின் பத்திரிகை என்ன சொல்வார்கள்?


Venkatesh
ஏப் 14, 2024 20:44

200 ரூபாய் ஊ பி கள் கதற போகிறார்கள்


SIVA
ஏப் 14, 2024 18:52

இந்த தேர்தலில் தமிழகத்தில் உண்மையான போட்டி ஆர் எஸ் பி மாடல் பத்திரிகைகளுக்கும் மக்களுக்கும் தான் , பத்திரிகைகள் அரசு தவறு செய்யும் போது கேள்வி கேட்க வேண்டும் , அவர்கள் கேள்வி கேட்க வில்லை , இப்போது மக்கள் கேள்வி கேட்கின்றார்கள் , சோசியல் மீடியாவில் மட்டும் தான் அவரகள் அரசியல் செய்கின்றார்கள் , நாங்கள் தான் மக்களோடு இருக்கின்றோம் என்று சொன்னார்கள் , இப்போது மக்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட அவர்களிடம் பதில் இல்லை


M Ramachandran
ஏப் 14, 2024 17:45

இந்த தேர்தல் அரசியல் வாதிகளுக்கு ஒரு படிப்பினய் கற்று கொடுக்கிறது இனி மக்களை கிள்ளுக்கீரையாகா நினைக்க முடியாது நல்ல படிப்பினை நல்குவார்கள் சீமான் அரசியலில் இன்னும் சிறிது முதிர்ச்சியா கையாள வேண்டும் நல்லா காலம் கிடைக்கும்


கனோஜ் ஆங்ரே
ஏப் 14, 2024 17:41

உங்க வீடியோவுல மோடிஜி கை தூக்கி அசைத்து காட்டும் போதே தெரியுதே? உங்க சர்வே முடிவு என்னவாக இருக்கும்னு


கனோஜ் ஆங்ரே
ஏப் 14, 2024 17:39

///இந்த முடிவுகள் நாங்களே எதிர்பாராத வகையில் பரபரப்பாக அமைந்துள்ளன-// நீங்க எதிர்பாராதது என்னவா இருக்கும் சொல்லட்டுமா? தமிழ்நாட்டில் மொத்த தொகுதிகளில் பாஜக கூட்டணி முப்பத்தைந்து தொகுதிகளில் வெற்றி பெறும் குறிப்பாக, பாஜக இருபத்தாறு தொகுதிகளில் வெற்றி பெறும்னு சொல்லப் போறீங்க கரெக்டா?


Duruvesan
ஏப் 14, 2024 23:17

நோட்டா கட்சியை பார்த்து விடியல் முதல் கடைசி அல்லக்கை வரை ஏன் கதறல்


மேலும் செய்திகள்