எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்
சென்னை:எஸ்.சி., - எஸ்.டி., மாநில ஆணையத்தின் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிவு பெற்றுள்ளது. முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் தலைவராகவும், ரேகா பிரியதர்ஷினி உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகின்றனர். காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், துணை தலைவராக இமயம், உறுப்பினர்களாக செல்வகுமார், ஆனந்தராஜா, பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா பிறப்பித்து உள்ளார்.