உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதவிடாய்; வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; 3 பேர் மீது வழக்கு

மாதவிடாய்; வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; 3 பேர் மீது வழக்கு

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்பறையில் அமர்ந்து தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tuewtdmx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=08ம் வகுப்பை சேர்ந்த அம்மாணவி, வகுப்பறை முன் படியில் அமர்ந்து தேர்வெழுதுவதை கண்டு அவரது உறவினர் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, 'இங்கு அப்படித்தான் நடக்கும்; வேண்டுமென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என ஆசிரியர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணைக்கு உத்தரவு

மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த பள்ளியில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி இது போல் செய்யக்கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சஸ்பெண்ட்

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

வழக்குப்பதிவு

இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகியோர் 3 பேர் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sampath Kumar
ஏப் 14, 2025 11:54

சுதந்திரம் வாங்கி 75 வருடம் ஆகியும் இந்த கொள்கைகளை பின்பற்றும் மடயர்களை என்ன சொல்வது


Mecca Shivan
ஏப் 10, 2025 19:31

மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம் ..


N Annamalai
ஏப் 10, 2025 19:01

பெற்றோர் கேட்டுக்கொண்டதாக முதல் செய்தி .இப்போ அது வெளிவரவில்லை .ஏன் .பெற்றோர் கேட்டுக்கொண்டு இருந்தால் எப்படி குற்றம் ஆகும் .


என்னத்த சொல்ல
ஏப் 10, 2025 16:20

மாதவிடாய் சமயம் தீட்டு என்று சனாதனம் சொல்கிறது. அதனால் தான் அதை ஒழிக்க வேண்டும் என சொல்கிறார்கள்..


Prasanna Krishnan R
ஏப் 10, 2025 17:34

நீங்க உண்மையான ஆண்மகன்னா உங்க உண்மையான பெயரிலேயே கமெண்ட் பண்ணுங்க. இந்து தர்மம் அவங்களை பெஞ்சில் உட்கார வைக்கக் கூடாதுன்னு யார் சொன்னது? அவங்களுக்கு உடல் ரீதியான ஓய்வு கொடுக்கப்படும். அவ்வளவுதான். மு .. மாதிரி பொய் சொல்லாதீங்க.


என்னத்த சொல்ல
ஏப் 10, 2025 19:20

இப்போ என்னோட உண்மையான பிற தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க.. நான் சொல்றது உண்மையா பொய்யான்னு படித்தவரை கேட்டு தெரிச்சுக்க தம்பி.


கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 10, 2025 15:58

கழட்டி அடிக்கணும் அந்த பள்ளி நிர்வாகத்தை


Mani . V
ஏப் 10, 2025 14:26

இதெல்லாம் என்ன மாடலோ?


sankaranarayanan
ஏப் 10, 2025 13:02

பள்ளி கல்வி அமைச்சருக்கு இந்த விஷயம் தெரியுமா அல்லது தெரிந்து தெரியாததுபோல் நடிக்கிறாரா என்ன ஆக்க்ஷன் எடுத்துள்ளார் இதை வளரவிட்டால் நாளை இதுபோன்றே அவர்களை பள்ளிக்கே வராதே என்று ஆணையும் இடுவார்கள் மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால் போதும் என்பார்கள்


மணி
ஏப் 10, 2025 12:43

அரசு பள்ளியா: தனியார் பள்ளியா புரியல நடவடிக்கை அவசியம் வெறும் கண்துடைப்பு ஆகாது. தனியர் பள்ளியா இருந்தால் நடவடிக்கை இருக்காது காரணம் ......


நிக்கோல்தாம்சன்
ஏப் 10, 2025 20:57

இதை சொல்லவில்லை என்றால் அது கார்பொரேட் ஸ்கூல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை