| ADDED : ஜன 03, 2024 12:02 AM
தமிழகத்தை சேர்ந்த மரபுவழி கலைஞர்கள், நவீன பாணி கலைஞர்கள், நுண்கலை துறையில் செய்துள்ள சாதனைகள், சேவைகளை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் ஆறு கலைஞர்களுக்கு கலைசெம்மல் விருதுடன், தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியானோர் வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 3157 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், டிச., 17, 18ல் அதீத கன மழை பெய்தது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இருந்த அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் பாழாகின.எனவே, மழையில் நனைந்த தானியங்களை திரும்ப பெற்று, தரமான பொருட்களை மட்டுமே வினியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.