உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரியில் பிளாஸ்டிக் தடையால் குப்பையாகிறது மேட்டுப்பாளையம்

நீலகிரியில் பிளாஸ்டிக் தடையால் குப்பையாகிறது மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தை தூய்மையாக்க எடுக்கப்படும் நடவடிக்கையில் மேட்டுப்பாளையம் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து, குப்பை மேடாக மாறி வருகிறது. கோடை சீசன் துவங்கியதை அடுத்து, ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், பிளாஸ்டிக் இல்லாத, துாய்மையான மாவட்டமாக மாற்ற, நிர்வாகம் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதித்துள்ளது. அதையும் மீறி கொண்டு வந்தால், ஒரு பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு, 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இதை கண்காணித்து பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லாறு தூரிப் பாலம் அருகே, சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் அருகே சுற்றுலா பயணிகள் பாக்குத் தோப்புகளை பார்க்கவும், இயற்கை காற்றை சுவாசிக்கவும், வாகனத்தை, சாலையின் ஓரத்தில் நிறுத்தி இருபக்கம் தடுப்பு திட்டுகளில் அமர்கின்றனர். அப்போது திட்டின் மீது அமர்ந்து உணவை சாப்பிட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சாலையின் ஓரத்திலும், தடுப்பு சுவர்கள் மீதும் வைத்து செல்கின்றனர். அவற்றை எடுத்துச் சென்றால் கல்லாறு சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்படும் என்பதால் அங்கேயே சுற்றுலா பயணிகள் வீசி செல்கின்றனர்.இதுகுறித்து பாக்கு தோப்பு விவசாயிகள் கூறுகையில், ''ஊட்டிக்கு கார் மற்றும் வேன்களில் செல்பவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி வீசும் போது, சாலையின் ஓரத்தில் உள்ள, பாக்கு தோப்புகளும், சாலையும் குப்பைத் தொட்டியாக மாறி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தை துாய்மையாக்க மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை, குப்பைத்தொட்டியாக சுற்றுலா பயணிகள் மாற்றி வருகின்றனர். எனவே மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை முடியும் இடத்தில், கோவை மாவட்ட நிர்வாகம், வாகனங்களை சோதனை செய்து, பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை