உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளின் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களாக, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.இந்நிலையில் இன்று (ஜூலை 20) காலை முதல் வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில், நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில், 16 கண் மதகுகள் வழியாக அதிகமான உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ديفيد رافائيل
ஜூலை 20, 2025 09:59

Dam தூர் வாராம இருக்கும்போல. தண்ணீர் சேர்த்து வைக்க துப்பில்லை. வீணாக கடலில் கலக்கிறது.


sekar ng
ஜூலை 20, 2025 09:55

வீணாக கடலில் கலப்பத்தால் மணலும் வீணாக்கிறது, இதற்கு மேக்கே தாட்டு அணை காட்டினால் என்ன தவறு. கர்நாடகவை எதெற்கெடுத்தாலும் தாக்க வேண்டும் அப்போது தான் ஓட்டு என்ற நிலைமை. 1, நமக்கு வேண்டிய DMC நீரை குறைக்கக்கூடாது என்று கண்டிஷன் போடவேண்டும். 2,மின்சாரதில் பாதி, 3, செலவில் பாதி 4, சாவி தமிழகத்தில்


sekar ng
ஜூலை 20, 2025 09:41

மேட்டூர் டாம் தூர்வார வேண்டும். பொதுவாக தூர்வாறுதல், சாலை போடுதல் மழை காலங்களில் தவிர்க்க வேண்டும். ஆனால் இப்போதுதான் மழையில் ரோடு போடுகிறார்கள். ஏன் இப்படி மக்கள் பணத்தை வீணாடிக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி