வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மும்மாரி பொழியும் என்றுதான் இந்துமதவாத வரலாறு சொல்கிறது . முப்பதுமாரி முன்னூறுமாரி என்பது திராவிட ஆட்சியில் மட்டுமே நடக்கும்
மேட்டூர்: மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால், மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கிறது. நேற்று, 9,828 கனஅடி-யாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 31,954 கன அடியாகவும், மாலை 36,985 கன அடியாகவும் அதிகரித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=001xtoqf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டெல்டா பாசனம் மற்றும் கால்வாயில் வினாடிக்கு 23,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.5 அடியாகவும், நீர் இருப்பு 92.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணை நிரம்ப இன்னும் அரை டிஎம்சி நீர் மட்டுமே தேவைப்படுகிறது.
மும்மாரி பொழியும் என்றுதான் இந்துமதவாத வரலாறு சொல்கிறது . முப்பதுமாரி முன்னூறுமாரி என்பது திராவிட ஆட்சியில் மட்டுமே நடக்கும்