உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பள்ளிகளில் டிசம்பர் 15ல் அரையாண்டு தேர்வு

 பள்ளிகளில் டிசம்பர் 15ல் அரையாண்டு தேர்வு

சென்னை: தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான, 2025 - 26ம் கல்வியாண்டுக்கான அரையாண்டு தேர்வு, டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறது. துவக்கப் பள்ளி களில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு, இரண்டாம் பருவத் தேர்வு, டிச., 15 முதல் 23 வரை நடக்கிறது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக்கான தேர்வும், அதே நாட்களில் நடக்கிறது. இந்த தேர்வுகள், காலை, மாலை என, இரு வேளைகளில் நடைபெற உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு, டிச., 10ம் தேதி துவங்கி, 23ல் முடிகிறது. அதன்பின், அரையாண்டு விடுமுறை துவங்கும். 2026 ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை