உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி பேசும் போது மைக்... துண்டிப்பு : ஸ்டாலினுடன் மோதல்

பழனிசாமி பேசும் போது மைக்... துண்டிப்பு : ஸ்டாலினுடன் மோதல்

சென்னை : தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலைகள் குறித்து, நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி காரசாரமாக கேள்விகள் எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழனிசாமி தொடர்ந்து பேச முடியாத வகையில், அவருக்கான, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைக் கண்டித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் துவங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ''பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்,'' என, சபாநாயகரை பார்த்து அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி தர தயங்கிய சபாநாயகர், ''காலை சபை துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே, நீங்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து, ''அனுமதி தரக்கூடாது,'' என்று அமைச்சர் துரைமுருகன் கூறிய நிலையில், முதல்வர் குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கும்படி கூறினார்.இதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:பழனிசாமி: மதுரை, பெருங்குடி அருகே சிவகங்கையை சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். கோவை மதுக்கரையில், ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். ஈரோடு நசியனுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, தம்பதி கொடூரமான முறையில் வெட்டப்பட்டதில், கணவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே மடபுரத்தில், கோடாங்கி சந்தானம் என்ற குறி சொல்லும் நபர் அரிவாளால் வெட்டிக் கொல்லட்டுள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று முதல்வர் சொன்ன தினமே, நான்கு கொலைகள் நடந்துள்ளன.முதல்வர் ஸ்டாலின்: நீங்கள் எது வேண்டுமானாலும் பேசுங்கள்; அதற்கான ஆதாரங்களை நான் தருகிறேன்.சபாநாயகர் அப்பாவு: அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து பேச, எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உள்ளது. நீங்கள் நான்கு குற்றச்சாட்டுகளை கூறி விட்டீர்கள். அதை பதிவு செய்ய வேண்டும். அவ்வளவு தான்; சொல்லி முடியுங்கள்.அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுவதில் தவறில்லை. என்ன நடந்தது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் போது, அரசு மீது குற்றம் சாட்டுகிறார். அரசின் நடவடிக்கை என்ன என்று தான் அவர் கேட்க வேண்டும்.பழனிசாமி: அன்றாட நிகழ்வாக தொடர்ந்து நடக்கிறது. ஒருநாள் நடந்தால் பரவாயில்லை. திருநெல்வேலி கொலை சம்பவத்தை பற்றி முதல்வர் நேற்று சொன்னார். அன்றே நான்கு கொலைகள் நடந்துள்ளன. இது, மக்களின் உயிர் பிரச்னை. பேசித்தான் ஆக வேண்டும்.அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தவர். என்ன நடந்தது என்று கேட்டால், அதற்கான பதிலை முதல்வர் சொல்வார். பொதுவான குற்றச்சாட்டை சொல்லும் போது, அது சரியாக வராது. தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.முதல்வர் ஸ்டாலின்: துாத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் பற்றி நான் சொல்லட்டுமா? விதிமுறைக்கு உட்பட்டு விளக்கம் அளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.சபாநாயகர்: எதிர்க்கட்சித் தலைவர் உட்காருங்கள். முதல்வர் பேசும் போது எழுந்து நின்று பேசுவது, எந்த வகையில் நியாயம்; நீங்கள் பேசுவது சபை குறிப்பில் இடம்பெறாது.முதல்வர் ஸ்டாலின்: சம்பவம் நடக்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது தான் கேள்வி. உங்களை போல, 'டிவி'யை பார்த்து தெரிந்து கொண்டதாக சொல்லவில்லை.இவ்வாறு முதல்வர் பேசியதற்கு, பதில் அளிக்க பழனிசாமி முயற்சித்தபோது, அவரது, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து, 'எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு மைக் கொடுங்கள்' என கோஷம் போட்டபடியே வெளிநடப்பு செய்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின், ''தைரியம் இருந்தால், நான் சொல்லும் விளக்கத்தை அமர்ந்து கேட்டுவிட்டு செல்லுங்கள்,'' என்றார். ஆனால், சபையில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

ஆனால் கொலைகள் குறைவுதான்'

''சில கொலை குற்றங்கள் நடக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும் போது, அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடப்பது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து, சில கருத்துகளை, எதிர்க்கட்சித் தலைவர் போகிற போக்கில் சொல்லி விட்டு சென்றிருக்கிறார். காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த பின் எடுக்கப்படும் துரித நடவடிக்கைகள்; குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என, இரண்டு வகையிலும் காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் கூலிப்படையினர் கண்காணிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, 2023ம் ஆண்டு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள், 49,280 ஆக இருந்த நிலையில், 2024ல் 31,498 ஆக குறைந்துள்ளன.ஒரே ஆண்டில், 17,782 குற்றங்களை குறைத்திருக்கிறோம். சில கொலை குற்றங்கள் நடக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும் போது, அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடப்பது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில் எண்ணிக்கை அளவில் பார்க்கும் போது, 2024ம் ஆண்டில் கொலை குற்றங்கள், 6.8 சதவீதம் குறைந்துள்ளன. அதாவது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது, 109 கொலைகள் குறைந்துள்ளன. அதேபோல, பழிக்கு பழிவாங்கும் கொலைகளின் எண்ணிக்கை, 2024ம் ஆண்டு 42.7 சதவீதம் குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில், அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு, 181 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு, நீதிமன்றம் வாயிலாக தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 2024ம் ஆண்டில் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 முதல் 2024 வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கையை ஆண்டு வாரியாக ஒப்பிட்டு பார்க்கும் போது, அ.தி.மு.க., ஆட்சியில், 2012ல் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 1,943 ஆக இருந்தது. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகமான எண்ணிக்கை. கடந்த 2013ம் ஆண்டு, 1,927 கொலைகள் நடந்துள்ளன. கொரோனா காலத்தில், ஊரடங்கு இருந்தபோதும், அ.தி.மு.க., ஆட்சியில், 2020ம் ஆண்டு 1,661 கொலைகள் நடந்துள்ளன. தற்போது காவல் துறையின் கடுமையான நடவடிக்கை காரணமாக, 2024ம் ஆண்டு மிக குறைவான எண்ணிக்கையில் 1,540 கொலைகள் மட்டுமே நடந்துள்ளன. இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Haja Kuthubdeen
மார் 21, 2025 21:14

இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு ஆளை வெட்டி கொன்றதா செய்தி வந்திருக்கு..என்னத்த சொல்றது...


M Ramachandran
மார் 21, 2025 17:50

ஜாக்கிரத்தை கை தேர்ந்த சேலை உருவுவரும் வேட்டியை உருவுவரும் இருக்கிறார்கள். எதற்கும் ஒரு செட் கை வசம் வைத்திருப்பது நன்று.


திராவிஷன்
மார் 21, 2025 15:15

அருமையான விளக்கம் அடுத்த மாசம் 10,000 கொலை பண்ணிட்டா அப்புறம் வாரம் வாரம் ஒரு நாலஞ்சு கொலையை குறைத்து கணக்கில் கொண்டு வந்துவிடலாம் அப்போ கொலைகள் குறைந்து வருகின்றன அப்படின்னு பதிவு பண்ணிடலாம்


Chinnamanibalan
மார் 21, 2025 14:59

நாடு விடுதலை அடைந்த 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பான திட்டங்களுடன், ஊழலற்ற நல் ஆட்சியை வழங்கியது எனலாம். இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியை, ஊழல் ஆட்சி என திமுகவினர் முத்திரை குத்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டினர். அதன் பின்னர் திமுக மீது எம் ஜி ஆரின் அதிமுக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி 1977 ல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டினார். ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு ஆட்சிகளுமே ஊழலை மட்டுமல்ல, தமிழக அரசின் கடனையும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வளர்த்தன. ஆனால் இரண்டு கட்சிகளும் தமிழக மக்களை ஏமாற்றுவது எப்படி என்ற கலையை நன்கு அறிந்தவர்கள். எனவேதான் காங்கிரஸ் கட்சி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி 60 காலம் கடந்தும் கூட, மாறி மாறி இரு கட்சிகளும் ஆட்சியில் அமர்ந்து கோடிகளை துணிந்து குவிக்கின்றனர். மக்களும் தேர்தல் வரும் போதெல்லாம் இரண்டு கட்சிகளிடத்தும் ஓட்டுக்கு நோட்டை பெற்றுக் கொண்டு, நமக்கேன் வம்பு என்ற மனநிலைக்கு வந்தது பரிதாபம்!!.


Sridharan Venkatraman
மார் 21, 2025 14:10

ஓடாதீங்க ... என் பதில் கேளுங்க என்பது நிர்மலா சீதாராமன் ஸ்டைல் . அதையும் காப்பி அடிக்கிறான் ...


பாரத புதல்வன்
மார் 21, 2025 14:06

இது சட்ட பேரவை அல்ல.... திராவிட மாடல் வெட்டி சபை, உடனே கலைத்து விடுவது நல்லது.


Narayanan
மார் 21, 2025 13:16

அதனால் என்ன ? அண்ணன் தம்பி விளையாட்டுதானே நீங்கள் எல்லோரும் பங்காளிகள்தானே தமிழகமக்களை... விளையாடிக்கொண்டு இருப்பது தெரிகிறது


Madras Madra
மார் 21, 2025 13:06

சும்மா போடாதீங்க பிட்டு


angbu ganesh
மார் 21, 2025 12:22

நாடகம் விடும் வேலைதான் உச்ச கட்சி நடக்குதம்மா


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 21, 2025 10:55

நல்லவேளை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆணாக இருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை