உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெல்டா மாவட்டங்களில் ரூ.399 கோடியில் 20 நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டப்படும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் ரூ.399 கோடியில் 20 நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டப்படும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை:“தஞ்சை, திருவாரூர் உட்பட ஐந்து டெல்டா மாவட்டங்களில், 399 கோடி ரூபாயில், 2.63 லட்சம் டன் கொள்ளளவில், மேற்கூரை அமைப்புடன் கூடிய, நவீன நெல் சேமிப்பு வளாகம் அமைக்கப்படும்,” என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:l நுகர்வோர் சேவைகளை மேம்படுத்த, 20 லட்சம் ரூபாயில், நுகர்வோர் குறைதீர் இணையதளம், மொபைல் செயலி உருவாக்கப்படும்l தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.63 லட்சம் டன் கொள்ளளவில், மேற்கூரை அமைப்புடன் கூடிய 20 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 399.19 கோடி ரூபாயில் கட்டப்படும்l காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 49,000 டன் கொள்ளளவில், ஆறு நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 69.82 கோடி ரூபாயில் கட்டப்படும்l தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நிரந்தர கட்டடங்கள், தலா 30 லட்சம் ரூபாய் வீதம், 15 கோடி ரூபாயில் கட்டப்படும்l தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், அலுவல் பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், கொள்முதல் மற்றும் பொது வினியோக திட்ட பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த, 'இ - ஆபீஸ்' எனப்படும், மின் அலுவலக செயலாக்கம், 100 சதவீதம் அமல்படுத்தப்படும்l அதிநவீன வசதிகளுடன் கூடிய, அதிக திறனில் நெல் கொள்முதல் நிலையங்கள், திருவாரூரில் இரண்டு; நாகை, மயிலாடுதுறையில் தலா ஒன்று அமைக்கப்படும்l ஒட்டன்சத்திரத்தில், அலுவலகம் மற்றும் எடைமேடையுடன் கூடிய 3,400 டன் கொள்ளளவு உடைய நவீன சேமிப்பு கிடங்கு; 5 கோடி ரூபாயில் சேமிப்பு கிடங்கு கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை