உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ தமிழகத்திற்கு கூடுதலாக வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் '' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தமிழக உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்படும் அரிசியை தவிர்த்து, பொது விநியோக திட்டம், மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மாதந்தோறும் 75 ஆயிரம் டன் கூடுதல் அரிசி தேவைப்படுகிறது. ஜூலை மாதம் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், அந்த அரிசி கிலோ ரூ.28 க்கு இந்திய உணவுக்கழகம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அரிசியை ஏற்கனவே வழங்கப்பட்டது போல் கிலோ ரூ.20க்கே வழங்க வேண்டும்.மாநிலத்திற்கு கூடுதலாக தேவைப்படும் 2,756 டன் கேழ்வரகை மானிய விலையில் வழங்க வேண்டும். தமிழகத்தில் கோதுமை நுகர்வு அதிகரித்து வருகிறது. மாதம் 23 ஆயிரம் டன் கோதுமை சராசரியாக தேவைப்படுகிறது. இதனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.டில்லியில் க்ரிஷி பவனில் நடந்த இந்த சந்திப்பின் போது , தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா, தமிழக உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் அண்ணாதுரை, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.இது குறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நிலுவையில் உள்ள பிரச்னைகள், தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினோம் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMESH
ஆக 23, 2024 05:03

ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும்... .நாம் அரிசி வாங்க விட்டாலும் அதை கணக்கு காட்டி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்...இதை ஒழிக்க வேண்டும்


Yasararafath
ஆக 22, 2024 23:29

மத்திய அரசிடம் எதற்கு தமிழக அரசு கெஞ்ச வேண்டும்.


Ramesh Sargam
ஆக 22, 2024 20:15

விலை குறைக்கப்பட்டவுடன், ஸ்டிக்கர் ஒட்டி தற்பெருமை தேடிக்கொள்வார்கள்.


தமிழ் மைந்தன்
ஆக 22, 2024 15:58

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது உணவுக்கு சிரமப்பட்டவர் . இன்று பல கோடி


sugumar s
ஆக 22, 2024 14:33

TN PDS officers should be fair. First of all keep board in all ration shops as to what is the subsidy amount by Central Govt and state govt. Also hang PM board and mention item-wise subsidy value of CG


Sridhar
ஆக 22, 2024 14:05

அரிசி கடத்தல் சம்பந்தமாக கண்காணிப்பு பணியை மத்திய அரசிடம் ஒப்படைத்தால், குறைந்த விலை கோரிக்கையை பரிசீலிக்கலாம். திருட்டு கும்பலின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே இருக்கும் என்பதால், இவர்களை மிக ஜாக்கிரதையாக அணுகவேண்டும்.


N Sasikumar Yadhav
ஆக 22, 2024 13:09

மோடிஜி தலைமையிலான மத்தியரசு இலவசமாகத்தானே அரிசி கொடுக்கிறது அதன்மீது திராவிட மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டி பிழைப்பு நடத்துகிறதே


மேலும் செய்திகள்



புதிய வீடியோ