உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில் நிறுவன பணியாளர்களுக்காக இன்ஜி., கல்லுாரிகளில் புதிய படிப்பு அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

தொழில் நிறுவன பணியாளர்களுக்காக இன்ஜி., கல்லுாரிகளில் புதிய படிப்பு அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை:''தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:l 'மாபெரும் தமிழ்க்கனவுகள்' என்ற பெயரில், 3 கோடி ரூபாய் செலவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்l சீனாவின் ஷாங்காய் நகரில், 2026 செப்டம்பரில் நடக்கவுள்ள உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், 500 மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, வழிகாட்டுதல்கள், செய்முறை அனுபவங்கள், பயிற்சி திட்டங்கள், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்l அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 'இண்டஸ்ட்ரி இன்ஸ்ட்யூஷன் இன்டர்ஸ்பேஸ் செல்' எனும் தொழில் நிறுவன இடைமுகப் பிரிவு, 1.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்l மாணவர்கள் அனுபவ ரீதியாக வெவ்வேறு அறிவியல் பரிசோதனைகளை செய்து பார்க்கும் வகையில், இரண்டு மாவட்ட தலைநகரங்களில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'ஸ்டெம்' ஆய்வகங்கள் அமைக்கப்படும் நடத்தப்படும்l சென்னைக்கு அருகில், 'ட்ரோன்' சான்றிதழ் வழங்கும் சிறப்பு பிரிவு, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ