மின் கட்டண உயர்வுக்கு கருத்து கேட்க முடிவு; அமைச்சர் சிவசங்கர் தகவல்
கோவை, : தமிழக மின் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:சாமானிய மக்கள், சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இருந்தபோதும், தொழில்துறையினர் கருத்து பெறப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சூரிய ஒளி மின்சாரத்தை தமிழக அரசுக்கு கொடுக்கும்போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டணங்கள் இருக்கத்தான் செய்யும்.இவ்வாறு கூறினார்.