உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழை பெய்தும் பாதிப்பில்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

அதிக மழை பெய்தும் பாதிப்பில்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், அதிக அளவில் மழை பெய்த போதும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். 'பெஞ்சல்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், நேற்று, 500 இடங்களில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. சென்னை கிண்டி மடுவங்கரை பகுதியில் நடந்த முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது:கடந்த காலத்தில் புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு பணிகளால், மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் போன்ற இடங்களில், 50 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில், 24 மணி நேரத்தில், 18 முதல் 20 செ.மீ., மழை பெய்தது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், மழை அதிகமாக இருந்தாலும் பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை. அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, மழைக்கால சிறப்பு முகாம் நடந்து வருகிறது. ஒன்றரை மாதங்களில், 51,707 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 28 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். சென்னையின் நீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில், 7 டி.எம்.சி., அளவில் தான் நீர் உள்ளது. இன்னமும் மழை வந்தால் தான், வருங்காலங்களில் குடிநீர் பஞ்சம், வறட்சி ஏற்படாமல் இருக்கும். தற்போது, 500 மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை முடியும் வரை, மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். சென்னை தவிர, மழை தொடர்ந்து பெய்து வரும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், 300 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Nagarajan S
டிச 03, 2024 19:43

திருவண்ணாமலை சாத்தனூர் அணையிலிருந்து 1.68 லட்சம் கனஅடி நீர் தென் பெண்ணையாற்றில் முன் அறிவிப்பின்றி சொல்லாமல் திறந்ததால் 3 மாவட்ட மக்களை அரசு கடும் துயரத்திற்கு உள்ளாக்கி உள்ளது, ஆனால் மா.சு. அதிக மழை பெய்தும் பாதிப்பில்லை என்று எப்படி கூசாமல் பொய் கூறுகிறாரோ?


V RAMASWAMY
டிச 03, 2024 10:59

அப்படி பாதிப்பே இல்லை என்றால் எதற்கு மாண்புமிகு அமைச்சர் நேரு அவர்களை மத்திய அமைச்சரை சந்தித்து பாதிப்புக்கு நீதி கேட்க சொல்கிறீர்கள்?


PADMANABHAN R
டிச 03, 2024 10:42

வெட்கமே இல்லாமல் பொய் சொல்கிறார்கள்.


Haja Kuthubdeen
டிச 02, 2024 16:12

என்னது...பாதிப்பு இல்லையா!!!!


Rajasekar Jayaraman
டிச 02, 2024 13:15

திருட்டு திராவிட கூட்டம் என்றைக்கு உன்மை பேசியது இப்போது பேச ஒரு வினைக்கு எதிர்வினை கன்டிப்பாக உண்டு.


yts
டிச 02, 2024 12:54

இவருக்கு சென்னை மட்டும் தான் தமிழ்நாடு போல


Sathyan
டிச 02, 2024 12:45

இந்த திருட்டு திமுக விற்க்கு பொய் சொல்வது அல்வா சாப்பிடுவது போல...


Ramesh Sargam
டிச 02, 2024 12:41

வாய் கூசாமல் பொய் பேசுவதில் இந்த திமுகவினரை யாரும் மிஞ்சமுடியாது. ஏன் என்றால், அவர்கள் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே மடிபவர்கள். பாதிப்பு எதுவும் இல்லையாம். இவருடைய முந்தைய தலைவர் கருணாநிதியின் வீடே வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. மேலும் தொலைக்காட்சிகளில் காண்பிப்பது எல்லாம் பாதிக்கப்பட்ட இடங்களே. அதை எல்லாம் மறைத்து பொய் பேசுகிறார் இவர்.


பெரிய குத்தூசி
டிச 02, 2024 12:07

இந்த அண்ணாவி பேச்சு பேசும் மா சுப்பிரமணியத்தை என்ன செய்வது. பொய் செய்தி ப்ரோபகண்டா செய்தே பழக்கப்பட்ட இவனுங்களுக்கு வெள்ளத்தால் மக்கள் படும் கஷ்டம் தெரியாது. சென்னையில் 4000 கோடிக்கு மழைநீர் வடிகால் அமைச்சேனு சொல்றன் இந்த மா சுப்பிரமணியம். மழைநீர் வடிகால் இருந்த ஏன் வெள்ளம் தேங்குகிறது. மண்டை மேல ஒன்னும் இல்லேனா உள்ளேயும் ஒன்னும் இல்லேனு தெரியுது. முதல இந்த ஆளு எல்லாம் தெரிஞ்ச அண்ணாவி மாதிரி பேட்டி குடுக்கறதா நிறுத்தலானா திமுக 2026ல் காலி.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 02, 2024 12:06

எந்த பொருளையும் விற்பனை செய்பவர் இது நல்ல பொருள் என்று தான் கூறுவார். வாங்குபவர் இது நல்ல பொருள் என்று கூறினால்தான் அதில் உண்மை இருக்கும். திமுகவினரே எங்கும் பாதிப்பில்லை என்று செய்தித்தாள்களைப் பார்க்காமல் சொல்வது நகைப்புக்குரியது மட்டுமின்றி கேலிக்குரியதும் ஆகும். மேலும் இர்பான் விஷயத்தில் இவரது சாயம் நன்றாகவே வெளுத்துவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை