உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலையில் நெஞ்சை பிழியும் சோகம்; மண்ணில் புதையுண்ட 7 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலையில் நெஞ்சை பிழியும் சோகம்; மண்ணில் புதையுண்ட 7 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண்ணில் புதையுண்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்; அவர்களில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருப்பதை கண்டு, மீட்புக்குழுவினரே கண்ணீர் விட்டனர்.பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் சிக்கிக் கொண்டனர். சம்பவம் நடந்த நேற்று அங்கு மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்பு பணிகளில் தொய்வும், தாமதமும் ஏற்பட்டது. அவ்வப்போது மழை குறுக்கிட்டபோதிலும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் ஒருவர் சடலம் தென்பட்டது. அடுத்தடுத்து ஒவ்வொரு சடலமாக மீட்கப்பட்டது. இரவு 8 மணி நிலவரப்படி 5 சடலங்களும், சில உடல் பாகங்களும் மீட்கப்பட்டன. மண் மூடிய நிலையில் சடலங்கள் அனைத்தும் கிடந்தன. இதனால் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக்குழுவினர் வேதனையுடன் தெரிவித்தனர்.உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலங்களை கண்டு மீட்புக்குழுவினரும், போலீசாரும் கண்கலங்கினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அங்கு மழை கொட்டியதால் சிறிதுநேரம் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் மழை விட்டதும், மீட்பு நடவடிக்கைகள் தொடங்கின. இந் நிலையில் மீட்பு பணிகளையும், மண் சரிவு ஏற்பட்ட இடத்தையும் துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது; பாறை, மண் சரிவால் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உண்மையில் மிக துயரமான சம்பவம் நடந்துள்ளது.எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்தோம். எஞ்சிய மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

raja
டிச 03, 2024 18:04

அப்பன் வெட்டி வைத்த குழியில் விழுந்த குழந்தையைக் காப்பாத்த வக்கில்லாத எடப்பாடியே பதவி விலகு–ன்னு கூப்பாடு போட்டு கோபால் புற கும்பல் இதுக்கு பதவி விலகுமா...கள்ள சாராயம் குடித்து இறந்திருந்தால் இந்த விடியா மாடல் திருட்டு திராவிட அரசில் பத்து லட்சம் கிடைத்திருக்கும்...


Bye Pass
டிச 03, 2024 14:52

ஆதம்பாக்கம் வந்து பாருங்க தண்ணீர் வரும் பாதையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டியிருக்காங்க ..கக்கன் பிரிட்ஜ் இடது பக்கம் தண்ணீர் வரும்பாதையில் அடுக்கு மாடி குடியிருப்புகள் ,,டாஸ் மாக் பார் ..பகலில் வலது பக்கமும் நள்ளிரவிலிருந்து இடது பக்கமும் போலீஸ் கண்பார்வையில் நடக்கின்றன


raja
டிச 03, 2024 07:01

ஹும்... ஐயோ பாவம்... இதுக்கு அவங்க கள்ள சாராயம் குடிச்சு இறந்திருக்கலாம்...பத்து லச்சம் கிடைத்திருக்கும்....


veeramani hariharan
டிச 03, 2024 06:52

If go against nature we have to pay the price


Raj
டிச 03, 2024 06:18

மலைகளில் இருக்கும் மரங்களை வெட்டி வீடுகளை கட்டினால் மலை மண்ணின் கடினதன்மை குறைந்து விடும், பின் இது போல அசம்பாவிதங்கள் நடக்க தான் செய்யும், வயநாடு, கர்நாடக சம்பவங்கள் எல்லாம் இது தான் காரணம். அரசாங்கம் இது போல இடங்களில் வீடு கட்ட அனுமதிக்க கூடாது. அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.


இறைவி
டிச 03, 2024 06:00

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இறந்து விட்டார்கள். இனி எந்த குடும்பத்துக்கு தலா 5 லட்ச ரூபாய். உங்கள் வட்ட மாவட்டத்திற்கா? அந்த பணத்திற்கு அங்கு மோசமாக இருக்கும் பொது பிரச்சனைகளை தீர்க்க செலவழித்தால் அவைகளை அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்த குடும்பத்தை நன்றியுடன் நினைவு கூர்வார்கள்.


D.Ambujavalli
டிச 03, 2024 05:56

இயற்கையை சீண்டினால், அதன் கோபத்தை எதிர்கொள்ள யாராலும் இயலாது என்பதை உணர்ந்து, இனியாவது லஞ்சம் கமிஷன் என்ற பேராசையால் கண்டபடி நிலங்கள், மலையை பாழ்படுத்தாமல் இருப்பார்களா ?


amuthan
டிச 03, 2024 07:02

இதிலும் அரசியலா. கன்னியாகுமரியில் பெரிய மலைகள் உடைக்கப்பட்டு கேரளாவில் அதானி துறைமுகத்திற்கு செல்கிறது.


Kasimani Baskaran
டிச 03, 2024 05:44

மலைப்பாங்கான இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் எப்படி வீடு கட்ட அனுமதித்தார்கள் என்பது புரியவில்லை.


தாமரை மலர்கிறது
டிச 03, 2024 02:55

திமுக ஆட்சியின் அவலம். இந்த சோகத்தை காரணம் காட்டி மத்திய அரசிடம் உண்டியல் குலுக்க ஸ்டாலின் முயற்சிக்க கூடாது.


Naagarazan Ramaswamy
டிச 03, 2024 02:39

மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் இருப்பதே ஆபத்தானது. விரைவில் அரசு அவர்களுக்கு மாற்று நிலங்கள் கொடுத்து அப்புறப்படுத்தவேண்டுவைத்து மிக அவசியம். வருமுன் காப்பதே நலம்


சமீபத்திய செய்தி