உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு

சென்னை:கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர்.குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேநீர் விருந்து நிகழ்ச்சி நடந்தது. திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வர் சென்றதால் அவர் பங்கேற்கவில்லை.அமைச்சர்கள் ரகுபதி, அன்பரசன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் அரசு துறை செயலர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம்.பி., பாலகங்கா; பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் நடந்து வந்த சூழலில் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் நேற்று அமைச்சர்கள் பங்கேற்றது, இரு தரப்புக்கும் இடையில் சுமுக உறவு ஏற்பட வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இம்முறை ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். ஆனால் தி.மு.க., கூட்டணி கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை.தேநீர் விருந்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கவர்னர் மாளிகை சார்பில் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் 'கவர்னர் விருது - 2023'க்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கவர்னர் விருதுகள் வழங்கினார்.கடந்த 2022ம் ஆண்டு கொடி நாள் வசூலில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, திருச்சி கலெக்டர் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி; கடலுார் கலெக்டர் அருண் தம்புராஜ், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், பெரம்பலுார் கலெக்டர் சார்பில், சப் - கலெக்டர் கோகுல் ஆகியோருக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.மாநகராட்சிகள் பிரிவில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோப்பைகள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை