உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்வாய்கள் துார்வாரும் பணி அமைச்சர் ஆலோசனை

கால்வாய்கள் துார்வாரும் பணி அமைச்சர் ஆலோசனை

சென்னை:பாசன கால்வாய்களை துார்வாருதல் உள்ளிட்ட, நீர்வளத்துறை திட்டங்கள் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், நீர்வளத்துறை செயலர் மணிவாசன், சிறப்பு செயலர் ஸ்ரீதரன், முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன், மண்டல தலைமை பொறியாளர்கள், செயலாக்க பிரிவு தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் பங்கேற்றனர்.வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ள புதிய நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள், புதிய பாசன கட்டுமானங்கள், ஏரிகள், பாசன கால்வாய்கள் துார் வாருதல் உள்ளிட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். விவசாய சங்கங்கள் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்தும், அவற்றை செயல்படுத்துவது குறித்தும், பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை