உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உளறிக்கொட்டும் அமைச்சர்கள்; உச்சகட்ட கோபத்தில் முதல்வர்!

உளறிக்கொட்டும் அமைச்சர்கள்; உச்சகட்ட கோபத்தில் முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அமைச்சர்கள் ஏதோ ஒன்றை உளறிக்கொட்டி அவ்வப்போது சர்ச்சைக்கு வழி ஏற்படுத்திக் கொண்டே இருப்பது, தமிழக முதல்வருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக அமைச்சர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான துரைமுருகன், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூட்டத்தில் பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ahl53dl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு மாற்றுத்திறனாளிகள் மத்தியிலும், பொதுவான அனைவரது மத்தியிலும் கடும் கண்டனம் எழுந்தது. இது பற்றி முதல்வர் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன், வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதேபோல, ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியும், உளறிக் கொட்டி சர்ச்சையை உற்பத்தி செய்யக்கூடியவராக இருக்கிறார். பெண்கள் பஸ்சில் ஓசியில் பயணிப்பதாக, கூறி கேலி செய்தவர் பொன்முடி. குறை சொல்ல வந்த பெண் ஒருவரை அவர் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சை ஏற்பட்டது.பெண் ஒன்றிய சேர்மனிடம் ஒருவரிடம், 'நீங்கள் எஸ்.சி., தானே' என்று கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கினார். தண்ணீர் பிரச்னை பற்றி புகார் அளிக்க வந்த பெண்ணிடம், 'எனக்கா ஓட்டுப்போட்டு கிழித்தீர்கள்' என்று கேட்டார். கடைசியாக, அவர் பொதுக்கூட்டத்தில் பெண்கள் பற்றியும் சைவம், வைணவம் பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையத்திலும் பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இப்படி மூத்த அமைச்சர்களே அரசுக்கு தலைவலி உண்டாக்கும் வகையில் உளறிக் கொட்டுவது முதல்வருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாகவே பொன்முடியின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதல்வர் கோபத்தின் எதிரொலியாகவே அமைச்சர் துரைமுருகனும் தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார் என்கின்றனர் கட்சியினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Matt P
ஏப் 12, 2025 12:51

காசு கொடுத்து வாக்களிப்பது இருக்கும் வரை இதுவெல்லாம் நடக்க தான் செய்யும்.


Matt P
ஏப் 12, 2025 12:49

அமைச்சர் பதவி தமிழ்நாட்டில் இப்படி தரம் தாழ்ந்து விட்டது. இதுல வேற மாண்பு மிகு என்று அடை மொழி. வயது அதிகமாகி பொறுப்பில் இருந்தும் அறிவு முதிர்ச்சி வரலையே. ..அமைச்சராய் இருப்பவன் எல்லாவனும் வயசானவன் தான். மகேஷும் உதய நிதியும் தவிர ..குடும்ப உறுப்பினர் என்பதால் அவர்களுக்கு மந்திரி பதவி.


கண்ணன்
ஏப் 12, 2025 08:56

இவரும் அப்படித்தானே


சாமான்யன்
ஏப் 12, 2025 05:54

ஆட்சியையும், கட்சியையும் நிர்வாகிக்க திணறுகிறது திமுக. ஒரு நல்லவனும் இல்லை. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய திராணி இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசியல் வெயிலைவிட கொடுமை. நல்லவர்கள் அரசியலில் இல்லை. கடவுள் ஏன் கல்லானார் ? இந்த கல்லாய் போன மனிதர்களாலே.


Ganesh Murali
ஏப் 12, 2025 16:53

உண்மை. இனி மேல் கடவுள் கல்கி அவதாரம் எடுத்தால் தான் இதற்கு ஒரு விடிவு வரும்.


Bharathi
ஏப் 12, 2025 01:50

இந்துக்களை பற்றி என்னவேணா கேவலமா பேசலாம். எலெக்ஷன்ல 2000 ரூவா வீசினா வாங்கிகிட்டு ஓட்டு போட்டுடுவாங்கன்ற திமிர். மத்த மதத்தை பத்தி இப்படி பேசுவானுங்களா? இந்துக்களுக்கு எப்பதான் சொரணை வருமோ?


sankaranarayanan
ஏப் 11, 2025 21:08

இவர் பொன்முடி அணிந்தவர் அல்ல மக்களின் மனதை புண்ணாக்குபவர்


நிக்கோல்தாம்சன்
ஏப் 11, 2025 20:54

படிக்காத தற்குறிகள் ஆட்சியில்....?


Ganeshan R
ஏப் 11, 2025 18:36

இந்த லட்சணத்துல இவரு உயர் கல்வித்துறை அமைச்சர் வேற...கருமமே ...


Ganesan
ஏப் 11, 2025 19:54

மிக மிக வண்மையாக கண்டிக்க, மற்றும் தண்டிக்க வேண்டியதில் மாற்று இல்லை.தம்பி கணேசன், இவர் உயர் கல்வித்துறை அமைச்சர் இல்லை.


என்றும் இந்தியன்
ஏப் 11, 2025 17:57

தலைவன் எவ்வழியோ "குடி"படைகளும் அவ்வழியே...என்ன சுடலை மாயாண்டி ஜோசப் கான் சரிதானே.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 11, 2025 16:59

தலீவரே .... உங்க ஊட்டுல சைவமா வைணவமா ன்னு கேட்டுடப்போறாரு .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை