உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரவுநேர பயணத்தால் தொடரும் விபரீதம்: பஸ்- லாரி மோதல்; 8 பேர் பலி

இரவுநேர பயணத்தால் தொடரும் விபரீதம்: பஸ்- லாரி மோதல்; 8 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லூர்: ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே லாரி மற்றும் சுற்றுலா பஸ் மோதிய விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். சமீப காலமாக, இரவு நேர பயணத்தால் விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என பலதரப்பினர் வலியுறுத்தியும், அலட்சியம் செய்வதால் விபரீத விபத்துக்கள் தொடர்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wvt5xb5p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை வடபழனியில் இருந்து நேற்று(பிப்.,09) நள்ளிரவு புறப்பட்ட சுற்றுலா பஸ் மீது, இன்று(பிப்.,10) அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் இருந்து தப்புவதற்காக டிரைவர் லாரியை வலது புறமாக திருப்ப முயன்றபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த போது சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சமீபத்தில் தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. காரில் சென்ற ஆறு பேர் உயிரிழந்தனர். அதே போல் ஊட்டி அருகே இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டது. இரவு நேர பயணத்தால் விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. இதனால் இரவு பயணத்தையும், அதிகாலை பயணத்தையும் தவிர்த்தால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதை தொடர்ந்து நடந்து வரும் விபரீத சம்பவங்கள் உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
பிப் 10, 2024 18:55

இந்த குட்டி வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் தம் பொறுப்புணர்ந்து வண்டிக்களை ஓட்டுவதும் பிற வண்டி ஓட்டிகளுக்கும் இடைஞ்சல்


M Ramachandran
பிப் 10, 2024 18:51

லாரி ஓட்டுனர்கள் சரியான படிப்பறிவு யில்லாதால் ரோடு சென்சு இல்லதவார்களாக யிருக்கிறார்கள் இவர்களுக்கு கடும்யான பயிற்சி தேவை. லைசென்சு கொடுக்கும் முறை கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும் இந்த அரசியல் வாதிகளால் தான் இந்த நிலமை.


அப்புசாமி
பிப் 10, 2024 15:58

நடந்து போங்க...


S THEYAGARAJAN
பிப் 10, 2024 14:30

சரியாய் சொன்னிங்க


அசோகன்
பிப் 10, 2024 11:46

உண்மை..... இரவு பயணம் ஆபத்தானது. கைவிடப்பட்ட பழுதான வண்டிகள் நிற்பது....எதிரே வரும் வண்டியின் லைட் வெளிச்சத்தில் தெரியாது அடுத்தது தூக்கம்


NicoleThomson
பிப் 10, 2024 11:24

அதிக வெளிச்சம் ஏற்படுத்தும் வெள்ளை LEDலைட்டுகளை தடுக்க யோசிக்காம இன்னமும் என்ன செய்கிறது அரசு?


மு. செந்தமிழன்
பிப் 10, 2024 16:06

மிக சரியாக சொன்னீர்கள், LED முகப்பு விளக்குளால் அதிக விபத்துக்கள் நடக்கின்றன அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது


Sivakumar Subbian
பிப் 10, 2024 08:56

0 ....


Ramesh Sargam
பிப் 10, 2024 07:59

மக்களே இரவு நேர பயணத்தை தவிர்க்கவும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை