உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாளை., சிறையில் தி.மு.க., நிர்வாகிகள் சந்தித்தார் அழகிரி

பாளை., சிறையில் தி.மு.க., நிர்வாகிகள் சந்தித்தார் அழகிரி

திருநெல்வேலி: நில அபகரிப்பு வழக்கில் சிக்கி கைதான மதுரை தி.மு.க., நிர்வாகிகள் நான்கு பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நில அபகரிப்பு புகார் தொடர்பாக தி.மு.க., நகர் செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி சந்திர சேகர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரும் தற்போது பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்து பேசினார். அழகிரியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மொய்தீன் கான், மதுரை துணை மேயர் பி.எம்.மன்னனும் உள்ளிட்டவர்களும் உடன் சென்று ‌சந்தித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை