உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பச்சை துண்டுடன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள்

பச்சை துண்டுடன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள்

வேளாண் துறை அமைச்சர் மற்றும் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள், நேற்று பச்சை நிற துண்டு அணிந்து, சட்டசபைக்கு வந்தனர்.சட்டசபையில், நேற்று 2024 - 25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதையொட்டி, அவர் பச்சை நிற துண்டு அணிந்து இருந்தார்.பட்ஜெட் உரையை கையில் பிடித்தபடி, முதல்வரோடு சட்டசபைக்குள், அவர் நுழைந்த போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.அதேபோல், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பச்சை நிற துண்டு அணிந்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ