உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த மொபைல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர்

திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த மொபைல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த செல்போன், உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டில் தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, தன்னுடைய 'ஐபோன் 13 புரோ' ரக மொபைல் போனை, தவறுதலாக காணிக்கை உண்டியலில் போட்டுள்ளார். அதன் பின், கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார்.அதற்கு கோவில் நிர்வாகத்தினர், 'கோவில் உண்டியலில் செலுத்தப்படும் அனைத்தும் சுவாமிக்கு சொந்தம்' என, மொபைல் போன் வழங்க மறுத்துவிட்டனர். சமீபத்தில், அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது, தினேஷ் மொபைல் போனும் எடுக்கப்பட்டது. கோவில் நிர்வாகம், சிம் கார்டை மட்டும் அவரிடம் வழங்கி, மொபைல் போனை பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டியது.மொபைல் போன் பக்தரிடம் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தபடியே இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஜன.,05) நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: இந்த ஆட்சி கொடுக்கின்ற ஆட்சி, எடுக்கின்ற ஆட்சி அல்ல; திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான தீர்வு எட்டப்பட்டுவிட்டது; இன்று அதற்குண்டான பரிகாரம் நடைபெறும். இன்று அந்த நபரிடம் செல்போனை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

D.Ambujavalli
ஜன 06, 2025 08:12

குழந்தையிடம் பணத்தைக் கொடுத்து போ டச்சொல்பவரின் குழந்தை தவறி உண்டியலுக்குள் திருப்பதி பொள் பெரிய உண்டியல் விழுந்துவிட்டால் குழந்தை கோவில் சொத்து என்று வளர்த்துப், படிக்க வைத்து மணம் செய்விப்பார்களா, இப்படி பிரச்னை செய்து எட்டு மாதம் கழித்துப் பெற்றவரிடம் கொடுப்பார்களா? லட் ச ரூபாய் பொன் அதனால் அமுக்கப் பார்த்தார்கள்.


kantharvan
ஜன 05, 2025 20:48

அடுத்த பிறவியாவது நல்லதா அமையட்டும்


பெரிய குத்தூசி
ஜன 05, 2025 19:30

என்ன பரிகாரம் அது இதுன்னு கம்பிக்கட்டுற கதையெல்லாம் சொல்றீங்க. அப்போ பெரிய உண்டியலா செஞ்சி, சேகர் பாபுவையும், நம்ம முதல்வர் , துணை முதல்வர் எல்லாரையும் தூக்கி உள்ள போட்டுரலாம்.


என்றும் இந்தியன்
ஜன 05, 2025 17:38

சேகர்பாபு கூறியதாவது: இந்த ஆட்சி மக்களுக்கு கஷ்டம் தீமை நஷ்டம் அறிவிலித்தனம் கொடுக்கின்ற ஆட்சி என்று படிக்கவும் அப்போ போது தான் அதன் உண்மை அர்த்தம் புரியும் ,


Laddoo
ஜன 05, 2025 17:34

முருகனருளால் இது மானிடருக்கு செல்கிறது. இதே திருட்டு குடும்பத்துக்குள் சென்றிருந்தால் மற்றவர்களின் சொத்தை ஆட்டைய போடுவது போல் அபகரித்திருப்பார்கள்


Kumar Kumzi
ஜன 05, 2025 15:54

இந்த செய்தி வெளியானதால் திருப்பி ஒப்படைக்கப்படுகிறது இல்லை என்றால் ஆட்டைய போட்டிருப்பான்.


k Kumar
ஜன 05, 2025 15:04

கொடுக்கின்ற ஆட்சி, எடுக்கின்ற ஆட்சி அல்ல ஐயோ புல்லரிக்குது


Kundalakesi
ஜன 05, 2025 14:36

வசதி இல்லாத ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து வரி உயர்த்தி மக்களிடம் காசு பிடுங்கும் ஆட்சின்னு சொல்கிறீர்களா.


KRISHNAN R
ஜன 05, 2025 14:25

ஆஹா ஆஹா.... அரோகரா


N Sasikumar Yadhav
ஜன 05, 2025 14:21

கொடுக்கிற ஆட்சியில்லை . ஆட்டய போடுகிற திருட்டு திராவிட மாடல் ஆட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை