மேலும் செய்திகள்
ரேஷன் கார்டு விண்ணப்பம்; 1.71 லட்சம் நிலுவை
2 minutes ago
சென்னை: 'தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைவாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 minutes ago