உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவு வங்கிகளில் நவீன சேவை மையம்

கூட்டுறவு வங்கிகளில் நவீன சேவை மையம்

ராமநாதபுரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 'நவீன சேவை மையம்' தொடங்கப்பட உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 'நவீன சேவை மையம்' தொடங்கப்பட உள்ளது. இந்த சேவை மையத்தில் 'பிராட்பேண்ட்' இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டரும், வெப்கேமராவும், இங்க்ஜெட் பிரிண்டரும் இருக்கும். இதில் விவசாயிகளுக்கு உரிய சலுகைகள், கடன் வசதிகள் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளையும், பொதுமக்கள் இ-டிக்கெட், வெப் கேமரா மூலம், பாஸ்போட் சைஸ் புகைப்படங்கள் எடுத்தல், போன்ற பல்வேறு பணிகளை பெற்று கொள்ளலாம். மாநிலம் முழுவதும் 1100 தொடக்க வேளாண், ஊரக வங்கிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளில், கூட்டுறவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி