உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடி விமான நிலையத்தை 26ல் திறந்து வைக்கிறார் மோடி

துாத்துக்குடி விமான நிலையத்தை 26ல் திறந்து வைக்கிறார் மோடி

சென்னை : பிரதமர் மோடி வரும் 27, 28ல் தமிழகம் வருவதாக தகவல் வெளியானது. முதல் நாள் திருச்சி வந்து, அடுத்த நாள் அரியலுார் மாவட்டத்தில், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். தற்போது, மோடி வருகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து, வரும் 26ம் தேதி பிரதமர் மோடி, துாத்துக்குடி வருகிறார். புதுப்பிக்கப்பட்டுள்ள துாத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்த பின், மீண்டும் கேரளா செல்கிறார். அடுத்த நாள், கேரளாவில் இருந்து பிரதமர் மோடி திருச்சி வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு, ஆடி திருவாதிரை நிகழ்ச்சி யில் பங்கேற்கிறார். பின், மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சி வரும் மோடி, அங்கிருந்து பிற்பகல் விமானத்தில் டில்லி செல்கிறார். துாத்துக்குடி வரும் மோடிக்கு, தமிழக பா.ஜ., சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை