உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னராட்சி நீக்கப்பட்டு மக்களாட்சி மலரும்

மன்னராட்சி நீக்கப்பட்டு மக்களாட்சி மலரும்

புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல, எம்.ஜி.ஆரை பார்த்து பல நடிகர்கள் கட்சியை துவக்கி பார்த்தனர்; அவர்களால் முடியவில்லை. எம்.ஜி.ஆர்., இடத்தை பிடிக்க பலர் முயற்சி செய்தனர்; முடியவில்லை.கொரோனா காலத்தில் மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் முழு ஊதியத்தையும் அரசு ஊழியர்களுக்கு அப்போதைய முதல்வர் பழனிசாமி வழங்கினார்.ஆனால், அரசு ஊழியர்கள் ஓட்டுப் போடாததால் தான் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்து. தி.மு.க.,விற்கு ஓட்டுப்போட்ட அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இதனால், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஓட்டுப்போட அரசு ஊழியர்கள் தயாராக உள்ளனர்.தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், மறுமுறை ஆட்சிக்கு வராது. அக்கட்சிக்கு மாற்று அ.தி.மு.க., தான். மன்னராட்சி நீக்கப்பட்டு, மக்களாட்சி மலரும் தேர்தலாக, 2026 சட்டசபை தேர்தல் இருக்கும்.- கடம்பூர் ராஜு, முன்னாள், அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை