மேலும் செய்திகள்
இடி, மின்னலுடன் 29ல் மழை பெய்ய வாய்ப்பு
26-Jan-2025
சென்னை : 'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், பிப்ரவரி, 9 வரை வறண்ட வானிலையே நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: வடக்கில் இருந்து வரும் குளிர் காற்று காரணமாக, தமிழகத்தில் அதிகாலை வேளையில், பரவலாக பனி மூட்டம் காணப்படுகிறது. இது, மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், பிப்., 9 வரை வறண்ட வானிலையே காணப்படும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். நகரில் சில இடங்களில், காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Jan-2025