உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுக்கோட்டையில் கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை.

புதுக்கோட்டையில் கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை.

புதுக்கோட்டை: 1.25 பவுன் தங்க நகைக்காக தங்கையை கொன்றவனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பெருந்துரை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்ற சுரேஷ்(32). கடந்த 2021ம் ஆண்டு பொன்நகரில், 1.25 பவுன் தங்க நகைக்காக தனது சித்தி மகளான லோக பிரியா என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்தார்.லட்சுமணன் என்ற சுரேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரன் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தண்டனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ