உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி

சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி

திருச்சி: திருச்சி முக்கொம்பு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி- குளித்தலை சாலையில் முக்கொம்பு அருகே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸூம், அவரது ஜூப்பும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) ஆராவமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரது ஜீப் டிரைவர் பலத்த காயமடைந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=815tplt5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ஆர்.டி.ஓ., ஆராவமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 19, 2025 21:41

அந்த டிரைவர்க்கு எந்த பலனும் கிடைக்காத படி செய்யுங்க


rama adhavan
ஜூன் 19, 2025 16:01

அரசு பஸ்ஸா அசுர பஸ்ஸா?


எஸ் எஸ்
ஜூன் 19, 2025 15:12

அரசு அதிகாரிகள் பொது மக்களின் நன்மதிப்பை எவ்வளவு இழந்து விட்டனர் என்பது இங்கே பதிவாகும் கமெண்ட்டுகளை பார்த்தாலே புரிகிறது


Amar Akbar Antony
ஜூன் 19, 2025 14:45

இலஞ்சம் வாங்கும் அரசூழியர்கள் வாழ்க்கையென்பது அவர் வாங்கும் பாவத்தின் கூலி. இந்த விபத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை. என்றாலும் கொடுத்தவர்களுக்கும் இடையிலிருந்து உதவியவர்களுக்கும் தன தெரியும். பணம் நிரந்தரமில்லை. பொதுமக்களின் சாபத்தை பெறாதீர்கள்.


SUBRAMANIAN P
ஜூன் 19, 2025 13:40

லஞ்சம் ஊழலில் கொழித்து செழிக்கும் அரசு அதிகாரிகளும் இதை பார்த்து திருந்துங்கள். வாழ்க்கை உயிர் நிச்சயம் இல்லாதது.


theruvasagan
ஜூன் 19, 2025 17:55

அதிகாரிகளோ அரசியல் வியாதிகளோ இதையெல்லாம் பார்த்து திருந்த மாட்டாங்க. மிச்சம் உள்ள வாழ்நாளில் இன்னும் எவ்வளவு சுருட்டலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பாங்க.


mahalingamssva
ஜூன் 19, 2025 13:34

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்


Jayaraman
ஜூன் 19, 2025 13:16

Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும்.


Natchimuthu Chithiraisamy
ஜூன் 19, 2025 13:10

அரசு பேருந்துகள் 2000 வண்டிக்கு பிரேக் சரி இல்லை என சொல்லுவது உண்மைதானா


V Venkatachalam
ஜூன் 19, 2025 16:29

அது உணமைதான் என்னும் அளவுக்கு கிசு கிசு போய்க் கொண்டிருக்கிறது. டடரைவரின் உயிரே டிரைவர் கையில் இல்லை என்பதே உண்மை.‌ எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி. அதற்கு இந்த நான்காண்டுகளே சாட்சி.


சமீபத்திய செய்தி