| ADDED : பிப் 25, 2024 01:04 AM
சென்னை:தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு, தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில், 2019 லோக்சபா தேர்தலில் இருந்த கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன. கூட்டணியில் உள்ள கட்சிகளுடன், தி.மு.க., தலைமை முதற்கட்ட பேச்சை ஏற்கனவே முடித்து விட்டது.இரண்டாவது கட்ட பேச்சுக்குப் பின், தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியை துவக்கி உள்ளது. அறிவாலயத்தில் நடந்த பேச்சில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டன. இத்தொகுதிகளில் இக்கட்சிகள் மீண்டும் போட்டியிடுகின்றன.முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்: ஒரு ராஜ்யசபா, 'சீட்' கேட்டோம். தேர்தல் முடிந்த பின், நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்தனர். ராமநாதபுரம் தொகுதியில், முஸ்லிம் லீக் சார்பில், நவாஸ் கனி மீண்டும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார். கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன்: எங்கள் கட்சி வேட்பாளர், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார். வேட்பாளர் யார் என்பதை, கட்சி செயற்குழு, ஆட்சிமன்றக்குழு கூடி முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.