உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம்!

நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; நாம் தமிழர் கட்சியை மாநிலக்கட்சியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக அரசியலில் எந்த கட்சியுடனும் கூட்டணியின்றி தேர்தல் களத்தை நாம் தமிழர் கட்சி சந்தித்து வருகிறது. திராவிட கட்சிகளுக்கு எதிராக தமது வலுவான பிரசாரத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து முன் வைத்து வருகிறார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை கண்டு வந்த நாம் தமிழர் கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் 8.22 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந் நிலையில், நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து அதுதொடர்பான கடிதத்தையும் அனுப்பி உள்ளது. இந்த விவரம் நாம் தமிழர் கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் நாம் தமிழர் கேட்டிருந்த விவசாயி நிலத்தில் உழவு செய்யும் விவசாயி, புலி சின்னங்களை தர முடியாது என்று அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Basker
ஜன 13, 2025 10:39

மானத்தை உயிராக மதிப்பவன் தமிழன். மானத்திற்காக உயிரை விடுவானே தவிர, காசிக்கு போய் ... இலையை வழித்து திண்றவனெல்லாம் தமிழனாக நடித்து எனும் திராவிட போர்வையில் பகுத்தரிவை பேச என்ற அருகதை உள்ளது. வடக்கே வள்ளலாரும், தெற்கே அய்யா வைகுண்டரும் செய்ததுதான் உண்மையான பகுத்தறிவு புரட்சி, தனிமனிதர்களாக இவர்கள் தங்கள் முழு வாழ்கையையை சமூகத்திற்காக அர்பணித்து பாடுபட்டு விதைத்த விதையை நேற்று வந்த பெரியாரும் திராவிடக் கூட்டமும் அறுவடை செய்து அரசியல் செய்து ஏப்பம் விட்ட கதையை மறைத்துவிட்டு விட்டனர். இவர்களுக்கு பகுத்தறிவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது. வள்ளலாரும், வைகுண்டரும் தமிழர்கள் என்பதால் திராவிட அரசியல் சூழ்ச்சியில் மறைக்கப் பட்டனர். வஞ்சகர்களின் திராவிடம் எனும் சூழ்ச்சி திரையில் அமுக்கப்பட்டனர். பொய்யான திராவிட திரையை கிழித்து தமிழன் வெளியே வர வேண்டும். அப்போதுதான் நமக்கான ஆட்சியும், உண்மையான தமிழின விடுதலையும் நமக்கு கிடைக்கும். திராவிட போர்வை கிழியாதவரை நாம் அரசியல் அடிமைகளே


raja
ஜன 11, 2025 15:41

ADMK DMK BJP yellarukkum neengathaan sinnam varainthu kodutheergalaa.


ஆரூர் ரங்
ஜன 11, 2025 14:22

ஆமை சின்னம் கேட்கலாம். யாருமே போட்டிக்கு வரமாட்டார்கள்.


Barakat Ali
ஜன 11, 2025 11:20

தேசவிரோத மற்றும் பிரிவினைவாத கட்சிகள் தடை செய்யப்படவேண்டும் ......


sundararajan
ஜன 11, 2025 09:52

மன நல மருத்துவமனைச் சின்னம் வழங்கினால் பொருத்தமாக இருக்கும்.


Barakat Ali
ஜன 11, 2025 09:07

சீமான் கோமாளி என்றால் திராவிட மாடல் தலைவர்கள் ????


sankaranarayanan
ஜன 11, 2025 08:53

இனி இவரும் திராவிட மாடல் அரசின் அவையில் எதிர்க்கட்சியாக பங்கேற்கலாம்


S.L.Narasimman
ஜன 11, 2025 07:50

சீமானின் தைரியமான போக்குக்கு கிடைத்த வெற்றி அங்கிகாரம்.


Kasimani Baskaran
ஜன 11, 2025 07:42

நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்து வாக்குகளை பிரிக்க முயல்வது சைமனின் வளர்ச்சியை பார்த்துதான். தான் வகுத்த வாக்குக்களை பிரிக்கும் தொழில் நுணுக்கத்துக்கே தீம்கா வீழப்போகிறது.


Muthu Subramanian
ஜன 11, 2025 05:48

பெரியானை சொறியானாக மாற்றியதில் பெரும் வெற்றி கண்டு தமிழுக்கு பெருமை சேர்க்கும் சீமான் வாழ்க வளர்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை