உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகை கலெக்டர் சேம்பர் முன் குடும்பமே படுத்து போராட்டம்

நாகை கலெக்டர் சேம்பர் முன் குடும்பமே படுத்து போராட்டம்

நாகப்பட்டினம் நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த செட்டிப்புலத்தை சேர்ந்தவர் வீரக்குமார், 45; மலேஷியாவில் வேலை பார்த்து வந்தார். செட்டிப்புலத்தில் சுகாதார நிலையம் கட்ட, 2020ல் வீரக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தை, ஊராட்சி தலைவர் கலா மூன்று பிரிவுகளாக வீரக்குமார் தந்தை ராஜமாணிக்கத்திடம் பத்திரப்பதிவு செய்து பெற்றார்.இந்நிலையில், 2023ல் ஊர் திரும்பிய வீரக்குமார், சொந்த ஊரில் கடை வைக்க குறிப்பிட்ட இடத்தில் மீதமுள்ள, 2.50 சென்ட் நிலத்திற்கு வில்லங்க சான்றிதழ் பெற்ற போது, 2.50 சென்ட் நிலத்தையும் சேர்த்து அபகரித்து பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.கலெக்டர், எஸ்.பி., என அனைத்து துறையினரிடம் மனு அளித்துள்ளார். வருவாய் துறையினர் விசாரணைக்கு பின், ஏப்., 5ம் தேதி, வீரக்குமாரிடம், 2.50 சென்ட் நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றால் நாகைக்கும், வேதாரண்யத்திற்கும் அலைய வைப்பதாக கூறி, வீரக்குமார், தந்தை, தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு முறையிட வந்தார். கலெக்டர் சேம்பர் வாயிலில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கணேஷ்
ஏப் 29, 2025 19:44

நாலு எழுத்துப் படிச்சு வெய்யுங்கடா. நல்ல லாயரா வெச்சு பத்திரத்தை சரிபார்த்து விற்கப் பாருங்கடா. திருட்டு திராவிடனுங்க கோவணம் வரைக்கும் அவிங்க பேரில் ரிஜிஸ்டர் செஞ்சு உருவிடுவானுங்க. அதுவும் திருவாலூர் ஏரியா


Guna Sharjah
ஏப் 29, 2025 09:57

oruthar ella oru kiramame sernthu seitha velai nilatha apagarithathu


முக்கிய வீடியோ