உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக ஆணழகன் ஆனார் நாமக்கல் வீரர் சரவணன்

உலக ஆணழகன் ஆனார் நாமக்கல் வீரர் சரவணன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 15வது உலக ஆணழகன் போட்டி, கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. மாலத் தீவில் நடந்த இப்போட்டியில், உலகின் பல நாடுகளிலிருந்து, 350க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, 90 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். இதையடுத்து, 55 - 100 கிலோ எடை பிரிவில், தங்கம் வென்றவர்கள் இடையே நடந்த, 'சாம்பியன் ஆப் சாம்பியன்' போட்டியிலும் தங்கம் வென்ற சரவணன், இரண்டாம் முறையாக, 'மிஸ்டர் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்.இதுபோல், 80 கிலோ எடை பிரிவில், தமிழகத்தைச் சார்ந்த மரிய ஜிஜோ வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற இருவருக்கும், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.சரவணன், சென்னை ஆலந்துாரில் பயிற்சி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
நவ 12, 2024 15:11

?? மாலத்தீவு_தமிழக இந்தியா ?? மறுபடியும் ஒன்றானது ?


இளந்திரையன் வேலந்தாவளம்
நவ 12, 2024 11:30

இந்த பழம் புளிக்கும் நரி கதைதான் ஞாபகம் வருது... உடற்பயிற்சி கூடத்திற்கு மழைக்கு கூட ஒதுங்காதவர்களின் ஏளன பேச்சை கேட்கும்போது சிரிப்புதான் வருது.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 12, 2024 09:30

இளம்பெண்கள் இவர்கள் மீது காதல் கொள்வதில்லை ..... அந்த மர்மம் புரியவில்லை ......


ராம் சென்னை
நவ 12, 2024 08:05

வாழ்த்துக்கள் சரவணன்


Subramanian
நவ 12, 2024 07:50

வாழ்த்துகள்


Smba
நவ 12, 2024 04:46

வேலைக்காது


இளந்திரையன் வேலந்தாவளம்
நவ 12, 2024 04:11

அழகி போட்டிகள் பற்றிய தகவல்கள் வெளியிடும் மீடியாக்கள் ஆண் அழகன் போட்டிகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை... வாழ்த்துக்கள் சரவணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை