வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நாங்களே ஈ பி எஸ் உடன் சேர்ந்து இப்போது தான் கூட்டணிக்கு ஒத்துக் கொள்ள வைத்து இருக்கிறோம்,இசகு பிசகாக எதையாவது பேசி காரியத்தை கெடுத்து விடாதீர்கள் அண்ணாமலை என்கிறாரோ?
அடக்க முடியாது கூட்டணிய உடைக்க உங்க கட்சில ஒரு முக்கிய புள்ளி தீவிரம் காட்டுது.
திமுக வீழ்வது உறுதி..... அமைச்சர் பேச்சுக்கள்.... விஜய் ஓட்டு பிரிப்பு....திருமா காங்கிரஸ் வைகோ கட்சியினர் எதிர்பார்க்கும் எலும்பு துண்டு.... இவையெல்லாம் தோல்விக்கு காரணம்
கிளறாத சோறு வேகாது. சீவாத தலை படியாது துவைக்காத துணி வெளிக்காது இவற்றை போலத்தான் விளக்காத உண்மை வீணாகி போகும் உண்மைகளை உரிய நேரத்தில் விளக்கி சொல்லாத காரணத்தினால் , அநியாயக்காரர்கள் அரியாசனத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முடிகிறது. : இது அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளில் ஒன்று. இதை பேனர் செய்து பாஜகவும் அண்ணாதிமுகவும் மேடையில் , தெரு முனைகளில் , மக்கள் கூடும் இடங்களில், வீதிதோறும் வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். கூட்டணி அவசியத்தை பற்றி யாரும் பேச தேவையில்லை. பேனர் அதுவாகவே பேசும்.
உங்கள் கூட்டணி பற்றி பேசுவது எங்களுக்கே கேவலமாகத் தான் உள்ளது, பாவம் உங்கள் கட்சியினர் எப்படி பேசுவார்கள்?
ஹி ஹி எட்டப்பன் கூட்டணி மட்டும் தான் ஆட்சியில் பங்கு இல்லை என்ற உடன் அனா டிச்சான் பாரு பல்டி எல்லாம் 4 கோடி ஊழல் செய்கிற வேலை
பிஜேபி இபோதே கூட்டணியை உறுதி செய்து இருப்பது விரைவில் தொகுதிகளை பிரித்து கொண்டு அது பற்றி அறிவிக்காமல் அந்த தொகுதிகளில் தேர்தல் பணிகளை அவரவர் கட்சிகள் தேர்தல் பணியாற்றதான் , பிஜேபி கு ஆர் ஸ் எஸ் 365 நாட்களும் தேர்தல் பனி செய்யும் , பிஜேபி 15% வாக்குகைகளை தமிழகத்தில் கையில் வைத்து உள்ளது , இதே வேகத்தில் போனால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 30% வாக்குகளை பிடித்து விடும் ,2026 வரை திமுக கூட்டணி பிரியாது, அது வரை சிறுபான்மை வாக்குகள் அதிமுகவிற்கு கிடைக்காது அது தெரிந்து அதிமுக இம்முறை பிஜேபி உடன் கூட்டணி வைத்து உள்ளது , TTV தினகரன் மேல் EPS போட்ட வழக்கை வாபஸ் வாங்கி விட்டார் , அதிமுக மெதுவாக ஒரே கட்சியாக இல்லாவிட்டாலும் ஒரே அணியாக செயல்படும் , தெற்கில் தேவர் சமூக மக்களின் முழு ஆதரவை பெரும் முயற்சியில் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைவர் பதவிக்கு வந்து ள்ளார் , தமிழக பிஜேபி தலைவரை திட்டாமல் எதிர் அணி அரசியல் செய்ய முடியாது , தேவை இல்லாமல் அவரை திட்டினால் அந்த சமூக வாக்குகள் அவர்களுக்கு மேலும் குறையும் , இந்த முறை அதிமுக வென்றால் போலி மதசார்பின்மை சமூக அரசியல் முடிவுக்கு வரும் ....
அடுத்தடுத்து பத்து தேர்தல்களில் தோல்வி கண்டும் எடப்பாடி இன்னும் வீம்பாக , வீறாப்பாக இருக்கிறார் என்று தெரிகிறது. ரெண்டு கட்சிக்கும் கூட்டணி தேவை என்று முடிவுக்கு வந்து ஒன்று சேர்ந்ததில் ஆளும் கட்சியின் பதற்றம் நன்றாகவே தெரிகிறது. பயம் வெளியே தெரியாமல் ஏன் கூட்டு சேர்ந்தாய் என்று அண்ணாதிமுகவை பந்தாவாக மிரட்டுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அண்ணாதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.. ஒரு எப்.ஐ,ஆர் கூட இன்னும் இல்லை. மிரட்டல் வந்தால் வரட்டும் என்ற தைரியம் இல்லாமல் அதிமுக இருக்கிறது. திமுக மாதிரி அண்ணாதிமுகவில் வக்கீல்கள் படை எதுவுமே இல்லையா ? அதிமுகவில் நான்கு ஆண்டுகளாக கட்சி பணியா நடந்துகொண்டிருந்தது , கட்சியை பற்றி அக்கறை கொள்ள, ?? ஓபிஎஸ் , சசிகலா, தினகரன், கொடநாடு வழக்கு , நெடுஞ்சாலை துறை ஊழல் வழக்கு என்று அவற்றைப்பற்றியே சிந்தித்து சிந்தித்து கட்சியின் எதிர்காலத்தை நினைக்காமல், வளர்ச்சி மீது அக்கறை கொள்ளாமல், காலத்தை ஒட்டிவிட்டார்கள். இப்போது பாஜக இறங்கிவந்து கூட்டணி என்று சொல்லிவிட்டது. இப்போது உண்மை வெளிவரத்தொடங்கிவிட்டது. யார் யாருடன் இதுநாள்வரை மறைமுக கூட்டணி , கள்ள உறவு வைத்துக்கொண்டிருந்தனர் மாநிலத்தில் இருக்கும் உண்மை எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , அதிமுக தொண்டர்களுக்கும் ஜெ விசுவாசிகளுக்கும் , திமுகவை அகற்ற விரும்பும் பாஜக தொண்டர்களுக்கும் மிகவும் நன்றாகவே தெரியும். ஆளாளுக்கு கூட்டணி பற்றி பேசக்கூடாது என்று மாநில தலைவர் தங்களுடைய தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருப்பது தேர்தல் நெருங்க நெருங்க நன்றாகவே பலனளிக்கும். அண்ணாதிமுக உண்மை தொண்டர்கள், ஜெ விசுவாசிகள் , கட்சி நலனுக்காக எதுவேண்டுமென்றாலும் செய்வார்கள், தற்போதைய தலைமையை புறக்கணிப்பதிலும்கூட
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அண்ணாதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.. ஒரு எப்.ஐ,ஆர் கூட இன்னும் இல்லை. என்ன பண்றது? ஆளுநர் அந்த கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளாரே உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியபின் ஒரே ஒரு அனுமதி கிடைத்து விஜய பாஸ்கருக்கு குற்ற பத்திரிகை கொடுத்திருக்கே.
மற்றவர்களின் வேலை கொள்ளையடிக்க வழிதேடுவது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது மக்களை எதிர்கட்சிகளை மிரட்டுவது மட்டுமே
கூட்டணி அம்போ ன்னு இன்னுமா உங்களுக்குப் புரியல? நெல்லைப் பக்க ஆளா இருந்தும் ப்ரோஜனப்படல.. திமுகவும் அதன் அடிமைகளும் எதிர்பார்ப்பது நடந்திருச்சு.. உங்க தலைக்கு மட்டும்தான் அதிமுகவை மிரட்டிப் பணியவைக்கத் தெரியுமா? கூட்டணி அறிவிப்பால் கடுப்பான துக்ளக் மன்னர் ஆடீம்காவை அன்போட மிரட்டியிருப்பாரு.. மாஜிக்கள் அடுத்த ஆறுமாதங்களில் அடுத்தடுத்து உள்ள போகவேண்டியிருக்கும். தேர்தல் வேலையை எப்படி பார்ப்பீங்க? உடனடியா பிஜேபியோட முறுக்கிக்கிட்டு நின்னா மன்னிச்சு உட்ருவேன். இல்லன்னா நடக்கிறதே வேற, தண்ணியில போட்ட குளுக்கோஸ் மாதிரி கச்சி கரைஞ்சுரும் ன்னு அன்போட மிரட்டியிருப்பாரு துக்ளக் மன்னர் ....