உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலியில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், சோதனைச் சாவடியிலும் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தச்சநல்லூரில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனின் நுழைவு வாயில் மீது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், நுழைவு வாயில் அருகே இருக்கும் கோவிலின் சுவர் பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதேபோல, தாழையூத்து சோதனை சாவடியிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சோதனை சவாடி மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரே நபர் தானா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kudandhaiyaar
அக் 12, 2025 18:14

காவல் நீதி, அரசு துறைகள் சுலபமாக ஆர் எஸ் எஸ் மற்றும் பி ஜே பி என்று முடிவு கட்டி சுலபமாக வழக்கை முடித்து வைத்து விடலாம் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இது குழந்தை விளையாட்டாக எண்ணி மறப்போம்


raja
அக் 12, 2025 17:30

சட்டமடா ஒளுங்குடா மாடல் டா ஆட்சி டா


முக்கிய வீடியோ