உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அச்சில் ஏற்ற முடியாத மகா கேவலம்; ஆபாச அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம்

அச்சில் ஏற்ற முடியாத மகா கேவலம்; ஆபாச அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மகா கேவலமாக ஆபாச அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தி.மு.க., அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சு அருவருக்கத்தக்கதாக, காதில் கேட்கவே முடியாத ஒன்றாக உள்ளது.நாராச நடையில் ஆபாசமாக அமைச்சர் பேசியதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமைச்சரின் ஆபாச பேச்சு பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனையடுத்து அவர் வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பதவியை தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பறித்து உத்தரவிட்டு உள்ளார். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு மவுனம் காக்கிறது. இச்சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து பொன்முடி பேசி , தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து உள்ளார்.ஆனால், ஜெயலலிதா அல்லது கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், ஒரு அமைச்சர் இப்படி அருவருக்கத்தக்க வகையில் பேசி இருந்தால் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பார். ஜெயலலிதாவும் அல்லது கருணாநிதியும் இது போன்ற அருவருக்கத்தக்க ஆபாச பேச்சுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போதைய தி.மு.க., தலைமை வெறும் கட்சி பதவியை மட்டும் பறித்துவிட்டு இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவியில் விட்டு வைத்திருக்கிறது. 'அவர் பேசிய பேச்சு, கட்சிப் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றது; அமைச்சர் பதவியில் இருப்பதற்கு இத்தகைய ஆபாச பேச்சு தகுதியானது' என்று தி.மு.க., தலைமை நினைக்கிறதா என இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இன்று காலை பிரபல எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா வெளியிட்ட பதிவு:கேவலம் - மகா கேவலம் என்ன வித்தியாசம்?இப்படி தவறாகப் பேசினார் என சொல்லும்படி பேசுவது கேவலம்.என்ன பேசினார் என்று கூட சொல்ல முடியாதபடி பேசுவது மகா கேவலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

D Natarajan
ஏப் 12, 2025 06:30

பணம் பத்தும் செய்யும்


Rajarajan
ஏப் 12, 2025 05:58

இதற்குப்பிறகும், இவர்களுக்கு வாக்களிக்கும் ஹிந்துக்களை எந்த லிஸ்ட்ல சேர்ப்பது ??


Rajarajan
ஏப் 12, 2025 05:57

இதுபற்றி எந்த தனியார் ஊடகமாவது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி நடத்துமா ? தெம்பும், திரானியும் இருக்கா ??


நிக்கோல்தாம்சன்
ஏப் 12, 2025 04:42

சொல்புத்தி தலைவன் , இப்போ யாரவது சொல்லித்தரமாட்டாங்களா என்று வி தடவி கொண்டிருப்பான் , நடவடிக்கை எடுக்க தெரியாது அவனுக்கு , அதனாலாயே இந்த தாமதம் என்று நினைக்கிறேன்


vadivelu
ஏப் 11, 2025 23:58

75வருடங்களாக இப்படித்தானே சில தலைவர்கள் ஏசி வருகிறார்கள் , அப்போதெல்லாம் , நம்மை இல்லை, என்று எருமை மீது மழை பெய்த மாதிரி இருந்ததன் விளைவு இது. விதை விதைத்ததே ....


R.MURALIKRISHNAN
ஏப் 11, 2025 23:01

அட கேவலமே, உன் பெயர் தான் திராவிட முன்னேற்ற கழகமா?.வரும் தேர்தலில் திமுக எனும் தீய கேவல கட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அதுதான் தமிழகத்திற்கு உண்மையான விடியல்


Mahadevan
ஏப் 11, 2025 22:53

விழுப்புரம் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள். திமுகவிற்கு வோட் போட்டவர்கள் 100% இவ்வித க்ரூர , கேவல எண்ணம் உடையவர்கள்.


S Bala
ஏப் 11, 2025 22:49

அவர் சைவம், அவர் மனைவி வைஷ்ணவம் என்கிறார்களே.... அவரது பிள்ளைகள்?


SENTHIL NATHAN
ஏப் 11, 2025 22:15

இந்த அளவு கேவலமான பிறவிக்கு ஓட்டு போட்டு ஜொயிக்க வைக்கிறாகளே அவர்களை என்ன சொல்றது????????


vadivelu
ஏப் 11, 2025 23:59

அவர்கள் இந்த பேச்சை ஆதரிக்கிறார்கள் என்றுதான் பொருள்.


Gopal
ஏப் 11, 2025 22:10

இவனின் பிறவி குணம். மாற்ற முடியாது. கீழ் தரமான எண்ணம் எப்போதும் இவனை விட்டு போகாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை