உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறைக்கு அதிகாரம்

கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறைக்கு அதிகாரம்

சென்னை: தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், புதிய சட்டத்துக்கான சட்ட மசோதாவை, அமைச்சர் ரகுபதி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். தமிழகத்தில், 1985ம் ஆண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்டம், தற்போது அமலில் உள்ளது. தீ விபத்து மற்றும் தடுக்கப்படக்கூடிய பல்வேறு விபத்துகளால், பெரும் அளவிலான மனித மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அதிக தொழில்நுட்பம் சார்ந்த, தீ பாதுகாப்பு மற்றும் தீ தடுப்புக்கு, புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதற்காக, அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என, 2021 - 22 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 1985ம் ஆண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்டத்துக்கு பதிலாக, புதிய சட்டத்தை இயற்ற, அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் சிறப்பு அம்சங்கள்: தமிழகத்தில் உள்ள கட்டடங்கள் 'ஏ,பி,சி,' என மூன்று வகையாக பிரிக்கப்படும் 'ஏ' வகை கட்டடங்களுக்கு தீயணைப்பு உரிமம், 'பி' வகை கட்டடங்களுக்கு தீ பாதுகாப்பு சான்றிதழ், 'சி' வகை கட்டடங்களுக்கு சுய சான்றளிக்கப்பட்ட தீ பாதுகாப்பு நெறிமுறை சான்றிதழ் வழங்கப்படும்நேரடி நிகழ்ச்சிகள், கண்காட்சி, கேளிக்கைகள், விழாக்களில், தீ பற்றக்கூடிய அல்லது அபாயகரமான பொருட்களை பயன்படுத்தினால், தற்காலிக தீயணைப்பு உரிமம் பெறுவது கட்டாயம் தேசிய கட்டட விதிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, கட்டடங்களில் தீத்தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வகை செய்ய வேண்டும்அபாயகரமான தொழிற்சாலை, தொழிற்கூடம், வணிக அல்லது பொது கட்டடங்களில், தீத்தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய, தீயணைப்பு பாதுகாவலரை நியமிக்க வேண்டும் அபாயகரமான கட்டடங்கள், வளாகங்களில் குடியிருப்பவர்கள், உரிமையாளர்களை வெளியேற்றி, அந்த கட்டடங்களை சீல் வைக்க, தீயணைப்பு துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ