உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்துக்கு தயாரானது புதிய பாம்பன் ரயில் பாலம்

போக்குவரத்துக்கு தயாரானது புதிய பாம்பன் ரயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்ல பாம்பன் ரயில் பாலம் முக்கிய வழித்தடமாக இருந்தது. கடந்த 1914ல் கட்டப்பட்ட இப்பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை எனக்கூறி, புதிய பாலம் கட்டும் பணியை ரயில்வே நிர்வாகம் 2019ல் துவக்கியது.ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் அங்கீகாரத்துடன், பாலத்திற்குரிய அனைத்து தளவாடங்களும் உருவாக்கப்பட்டன. தற்போது, 545 கோடி ரூபாய் செலவில், 101 துாண்களுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l2lzje86&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவில் கடலுக்குள் அமைக்கப்பட்ட முதல் செங்குத்து துாக்கு பாலம் என்ற பெருமையோடு, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்துள்ளன.இப்பாலத்தில் கடந்த 13, 14ம் தேதிகளில், மணிக்கு 80 முதல், 90 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார். முன்னதாக, நவ., 28ல் பாதுகாப்பு ஒப்புதல் அறிக்கை வெளியிட்டார். புதிய பாலத்தில் 75 கி.,மீ., வேகத்திலும், நடுவில் 72 மீட்டர் நீளமுள்ள துாக்கு பாலத்தில், 50 கி.மீ., வேகத்திலும் தொடர்ச்சி 11ம் பக்கம்

துாக்கு பாலத்தின் சிறப்பு

துாக்கு பாலம், 660 டன் எடை உடையது. பழைய பாலத்தை இயக்க, 20 பேர் தேவை. பாலம் திறக்க, 45 நிமிடங்களாகும். புதிய பாலத்திற்கு ஒருவர் போதும். தானியங்கி தொழில்நுட்பம் வழியே, புதிய பாலத்தை ஐந்து நிமிடத்தில் துாக்கி விட முடியும். மணிக்கு, 58 கி.மீ., வேகத்திற்கு காற்று வீசினால், அனிமா மீட்டர், பாம்பன் புதிய பாலத்தின் ரயில் சிக்னலை தானாகவே நிறுத்தி விடும். அதற்கேற்ற தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. காற்றின் வேகம், 80 கி.மீ., தாண்டும் போது துாக்கு பாலம் இயங்காது.ஆறு மீட்டர் வரை உயரம் உடைய சிறிய படகுகள், துாக்கு பாலத்தின் கீழே எளிதாக செல்ல முடியும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை