உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன; ஸ்டாலின் நம்பிக்கையுடன் காத்திருப்பு

கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன; ஸ்டாலின் நம்பிக்கையுடன் காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “தி.மு.க., கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகள் சேர உள்ளன; தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி கட்சிகள் கேட்கும் கூடுதல் தொகுதிகள் குறித்து பேசி சமாளிப்போம்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.'ஓரணியில் தமிழகம்' என்ற பிரசார இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நேற்று துவக்கி வைத்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

'ஓரணியில் தமிழகம்' பிரசார இயக்கத்தை, 45 நாட்கள் நடத்துகிறோம். தமிழகம் முழுதும் இன்று பொதுக்கூட்டங்கள் நடக்க இருக்கின்றன. நாளை வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க இருக்கின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மூத்த நிர்வாகிகள், அவரவர் சொந்த ஓட்டுச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல இருக்கின்றனர்.

துண்டு பிரசுரங்கள்

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது. தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் இல்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி கொடுப்பதில்லை. தமிழ் மொழிக்கு 113 கோடியும்; சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளை குறைக்க, மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க முடிவு செய்து, ஓரணியில் தமிழகம் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல், பண்பாடு, மொழி என எல்லா வகையிலும், தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.தி.மு.க., அரசின் திட்டங்கள், மக்களுக்கு நினைவில் இருக்கின்றன. இருந்தாலும், மக்களை சந்திக்கும்போது, தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்க இருக்கிறோம்.வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில், 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்.

சமாளிப்போம்

தி.மு.க., கூட்டணியில் இன்னும் கூடுதல் கட்சிகள் சேரும் வாய்ப்பு உள்ளது. அதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. வாய்ப்பு வரும் நேரத்தில், அக்கட்சிகளை சேர்ப்போம்; கலந்து பேசி முடிவு செய்வோம்.அதுமட்டுமல்ல; இப்போதுள்ள கூட்டணிக் கட்சிகள், கூடுதல் இடங்கள் கேட்க துவங்கி உள்ளன. தேர்தல் தேதி அறிவித்த பின், நாங்கள் உட்கார்ந்து பேசுவோம்; அதை சமாளித்து விடுவோம்.பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழகத்திற்கு அடிக்கடி வர வேண்டும். அவர் அடிப்படி வந்து சென்றால் தான், தி.மு.க.,வுக்கு கூடுதல் ஓட்டுகள் விழும். அவர் பேசுவது பொய் என்பதை மக்கள் அறிவர்.தி.மு.க.,வின் அனைத்து தொகுதிகளின் நிர்வாகிகளையும் சந்திப்பேன். ஒரு பூத் கமிட்டிக்கு, 30 சதவீதம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் நிர்வாகிகள், 40 சதவீதம் வரை சேர்ப்போம் என சொல்கின்றனர். 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக, 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். இதுவரை, 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதை சொல்லி மக்களை கவருவோம்.என்னை போல அன்புமணி இருக்க வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சொல்லியிருப்பது, அவரது ஆசை. அதை நான் ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. அவர் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். இவ்வாறு முதல்வர் கூறினார்.

கூடுதல் கட்சிகள் எவை?

தி.மு.க., கூட்டணியில், கூடுதல் கட்சிகள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதால், அது எந்தெந்த கட்சி என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்து உள்ளது.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள், இன்னும் அதிகாரப்பூர்வமாக சேரவில்லை. பா.ம.க.,வில் ராமதாஸ் அணி தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும், அன்புமணி அணி தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரிகிறது.ராமதாஸ் அணியும், தே.மு.தி.க.,வும் தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

'பழனிசாமியையும்

சேர சொல்வோம்''எதிர்க்கட்சியில் உள்ள குடும்பங்களை சந்திக்கப் போகிறீர்களா; ஓரணியில் தமிழகம் இயக்கத்தில் சேர வலியுறுத்தப் போகிறீர்களா' என்ற கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:நிச்சயமாக சந்திக்கப் போகிறோம்; விருப்பம் உள்ளவர்களை சேர்க்கப் போகிறோம். கட்டாயப்படுத்திச் சேர்க்கப் போவதில்லை. சேர்ந்தே தீருங்கள் என சொல்ல மாட்டோம். அவ்வாறு சொன்னாலும் சேர மாட்டார்கள். அதனால், அவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே சேர்ப்போம்.பழனிசாமி வீட்டுக்கு செல்வது என்பது, அங்கிருக்கக்கூடிய சூழ்நிலையை பொறுத்திருக்கிறது. நான் அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் கட்சிகள் எவை?

தி.மு.க., கூட்டணியில், கூடுதல் கட்சிகள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதால், அது எந்தெந்த கட்சி என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள், இன்னும் அதிகாரப்பூர்வமாக சேரவில்லை. பா.ம.க.,வில் ராமதாஸ் அணி தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும், அன்புமணி அணி தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரிகிறது.ராமதாஸ் அணியும், தே.மு.தி.க.,வும் தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Bhakt
ஜூலை 03, 2025 01:16

ஏற்கனவே சங்கிலி பறிப்பு, தாலி அரிப்பு, கஞ்சா கசிவு, கள்ள சாராயம், etc., etc., கட்சிகள் கூட்டணில தானே இந்த ஆட்சி ஓடுது நைனா?


Bhaskaran
ஜூலை 02, 2025 20:41

சைக்கோ வை துரத்திவிடனும் .ஐந்து உதிரி ஐந்து சீட் அண்ணியாருக்கு,பாமக ராம்தாஸ் பத்து, காம்ரேட்ஸ் தலா ஆறு,காங்கிரஸ் பதினெட்டு, விசிக ஐந்து,மீதி திமுக காவியுடன் சேர்ந்த அதிமுக கஷ்டம் ஒருவேளை விஜய் திமுக வாக்குகளை பிரித்தால் தொங்கு சட்ட சபை ஆனால் தமிழ்நாட்டில் தனிக்கட்சி ஆட்சியை மட்டுமே மக்கள் விரும்புவார்கள்


venugopal s
ஜூலை 02, 2025 18:26

கூட்டணி கட்சிகளுக்காக கமலாலயத்தையே நம்பிக்கையுடன் திறந்து வைத்து காத்திருக்கும் போது அறிவாலயத்தை திறந்து வைத்து காத்திருந்தால் தவறில்லை!


ராமகிருஷ்ணன்
ஜூலை 02, 2025 13:44

அப்போதும் கூட்டணி கட்சிகளை பேசி சமாளிப்போம் என்றுதான் சொல்கிறார் அதிகமாக சீட்டு தருவோம் என்று சொல்லவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சியினர் இதை கவனிக்க வேண்டும். கடைசி வரை கொத்தடிமையாக வைத்து உங்கள் கட்சிகளை அழித்து கபளீகரம் செய்து விடுவார்கள். சத்தியமாக ஜெயிக்க வாய்ப்பில்லை கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவது புத்திசாலி தனம்.


ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 10:37

நாட்டில் தமிழ்ப் பெயர் வைத்துள்ளவர்கள் சமஸ்கிருதப் பெயர் வைத்துள்ளவர்கள் என்ற விகிதாசாரம் பார்த்து நிதி ஒதுக்கலாம்.


சுந்தர்
ஜூலை 02, 2025 09:01

சரிதான். பாமக பிளவு பட்டு சேரும்.


Oviya Vijay
ஜூலை 02, 2025 07:21

ஒரு வருடத்திற்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் நாற்பதுக்கு நாற்பது வெற்றி என்பது எதிர்க்கட்சிகளின் மனக் கண்ணில் இருக்கிறது... ஆகையால் திமுக கூட்டணியில் இணைந்தால் வெற்றி உறுதி என்ற நிலையில் தங்களையும் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டால் தங்கள் கட்சிக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்து சட்டமன்றத்திற்கு செல்லலாமே என்ற ஆவலில் திமுகவின் கடைக்கண் பார்வைக்காக மற்ற கட்சியினர் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை... ஆனால் திமுக தங்கள் கூட்டணியில் இப்போதிருக்கும் கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களுக்குத் திருப்திகரமாக தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டாலே போதுமானது... வெற்றி தானாகவே கைகூடும்... ஏனெனில் எதிர்தரப்பின் பொருந்தாத கூட்டணியைப் பார்த்து இப்போதே மக்கள் எள்ளி நகையாட ஆரம்பித்துவிட்டனர்... ஆகையால் 2026 தேர்தலில் எதிர்தரப்பு படுதோல்வியைச் சந்திக்க உள்ளனர் என்பதே உண்மை...


vivek
ஜூலை 02, 2025 07:30

காலை புலம்பல் காமெடி படு ஜோர்


vivek
ஜூலை 02, 2025 10:49

அடுத்த வருடம் நீ போலி பெயரில் கருத்து போடுவாய்


Kjp
ஜூலை 02, 2025 11:58

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக+பாஜக கூட்டணி வைத்து இருந்தால் பதினேழு தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும். என்பது திமுக வின் மனக் கண்ணில் இருக்கும்.திமுக வின் ஓட்டு மூன்று சதவீதம் வேறு குறைந்து விட்டது.இவர்களுக்கு ஆதரவான லயோலா கருத்துக் கணிப்பில் திமுக வழுக்கு பெரிய ஆதரவு மக்களிடம் இல்லை.அந்த கருத்து கணிப்பில் அதிமுக+பாஜக கூட்டணி திமுகவை விட இரண்டு சதவீதம் அதிகமாகத்தான் உள்ளது. அதனால்தான் வீட்டுக்கு வீடு இப்போதே வோட்டு பிச்சை கேட்க திமுக ஆரம்பித்து விட்டது. இதெல்லாம் தெரியாமல் கனவுலகில் மிதக்க ஆரம்பித்து விட்டது.


ராமகிருஷ்ணன்
ஜூலை 02, 2025 13:48

கடந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கைகளை கூட்டி பார்த்து யார் ஜெயிப்பார்கள் என்று முடிவு செய்யுங்கள், திமுகவினர் மாதிரி புளுகு வேண்டாம். திமுகவினர் ஜெயிக்கவே முடியாது.


Oviya Vijay
ஜூலை 02, 2025 15:07

ராமகிருஷ்ணன் அவர்கள் ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்... உங்கள் பதிவுகளில் தொடர்ச்சியாகக் கடந்த காலங்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தைக் குறிப்பிட்டு அதை அப்படியே கூட்டினால் ஆட்சியை அமைத்து விடலாம் என தவறாகக் கணக்குப் போட்டுக் கொண்டுள்ளீர்கள்... ஆனால் அது உண்மையல்ல... அப்படி ஓட்டு சதவீதக் கணக்கு சரியாக வேலை செய்வதானால் ஒரே ஆட்சி தானே தொடர வேண்டும்... எப்படி திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்கின்றனர்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஏனெனில் மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் தான் முக்கிய காரணம்... சென்ற முறை அதிமுகவிற்கு ஓட்டு அளித்தவர்கள் தற்போது பாஜகவுடன் அதிமுக அமைத்திருக்கும் கூட்டணி பிடிக்காமல் வேறு கட்சிகளுக்கும் வாக்களிக்கலாம் அல்லவா... இதுவரை அண்ணாமலைக்காக பாஜகவிற்கு ஓட்டளித்தவர்கள் தற்போது அண்ணாமலையை மாநிலத் தலைமை பதவியிலிருந்து மேலிடம் தூக்கியதனால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவும் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் அல்லவா... இந்த மாதிரியான ஓட்டுக்கள் யாவும் திமுகவுக்கு மட்டுமே செல்லும் என்று நான் கூறவில்லை. ஆனால் இது மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கான ஒரு சிறு எடுத்துக்காட்டு... அவ்வளவே... மேலும் அனைத்துக்கட்சிகளுக்கும் இதுநாள் வரையில் கிடைத்துக் கொண்டிருந்த ஓட்டுக்களில் இருந்து ஒரு பகுதி புதிய கட்சி தவெகவுக்கும் இனி பிரியப் போகிறது. தயவுசெய்து அதையும் நினைவில் கொள்ளுங்கள்... ஆகையால் ஓட்டு சதவீதக் கணக்கு என்றைக்கும் உதவாது...


Oviya Vijay
ஜூலை 02, 2025 05:58

எனக்குத் தெரிந்து திமுக கூட்டணி மற்ற கட்சிகள் தங்களோடு இணைவார்கள் எனக் காத்திருக்கின்றனர் என்பதை விட திமுக கூட்டணியில் இணைய வெளியில் இருக்கும் மற்ற கட்சிகள் தான் ஆவலோடு காத்திருக்கின்றனர்... ஏனெனில் வெற்றி பெறும் குதிரை மீது தானே பந்தயம் கட்ட அனைவருமே விரும்புவர்... அது இயற்கை...


vivek
ஜூலை 02, 2025 07:58

உனக்கு ஒன்னும் தெரியாது.. எதுக்கு இவளோ பெரிய உருட்டு


Kannan Pgs
ஜூலை 02, 2025 05:18

ஈ கூட கூட்டு சேர பயப்படுகிறதே ND கூட்டணியப் பார்த்து நோட்டாவைக் கண்டு பயம் இருக்கும் தானே


SUBBU,MADURAI
ஜூலை 02, 2025 06:38

திராவிடத்தின் சாதனை!


சந்திரசேகரன்,துறையூர்
ஜூலை 02, 2025 03:26

ஏலே திராவிட திருட்டுப் பயல்களா இன்னும் எத்தனை நாளைக்குதான்டா மண், மொழி, பண்பாடுன்னு சொல்லி தமிழக மக்களின் தலையில் மிளகாய் அரைக்கப் போறீங்க? கடந்த நாலு வருஷத்துல நீங்க மக்களுக்கு என்னென்ன நல்லது செஞ்சிருக்கோம்னு சொல்லி ஓட்டு வாங்க துப்பில்ல எப்ப பாத்தாலும் மொழியை வைத்து அரசியல் பண்ணுவதே உங்களுக்கு வேலையாக போய்விட்டது. ஆனால் இந்தமுறை தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். மேலும் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் இல்லை.


சமீபத்திய செய்தி