உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டுவசதி செயலருக்கு புதிய பொறுப்பு

வீட்டுவசதி செயலருக்கு புதிய பொறுப்பு

சென்னை:வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, கூடுதல் பொறுப்பாக, சி.எம்.டி.ஏ., துணைத் தலைவர்பொறுப்பை கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், துணைத் தலைவர் பதவி, 2011 முதல் காலியாக உள்ளது. இதற்கு முழுநேர ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்காமல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலரிடம், கூடுதல் பொறுப்பாக இப்பதவி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில், சமயமூர்த்தி இத்துறை செயலராக வந்தபோது, சி.எம்.டி.ஏ., துணைத் தலைவர் பதவியை கூடுதல் பொறுப்பாக அளிக்காமல், 'எக்ஸ் அபிஷியோ' எனப்படும் அலுவல் ரீதியான துணைத் தலைவர் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தற்போது சமயமூர்த்திக்கு பதிலாக செயலராக வந்துள்ள காகர்லா உஷாவும், அலுவலர் ரீதியான துணைத் தலைவர் என சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான மாற்றங்கள் நேற்று வெளியிடப்பட்டன. சி.எம்.டி.ஏ.,வின் சட்ட விதிகளின்படி, துணைத் தலைவர் என்பது தனியான பதவியாக குறிப்பிடப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை