உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுமான பணிகளில் புதிய தொழில்நுட்பம் அவசியம்

கட்டுமான பணிகளில் புதிய தொழில்நுட்பம் அவசியம்

சென்னை: ''கட்டுமான பொருட்களின் தரம் குறித்து, ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்ய வேண்டும்; புதிய தொழில்நுட்பத்தை அனைத்து கட்டுமான பணிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் வேலு வலியுறுத்தினார். தமிழக அரசின் பொதுப்பணி துறை, இந்திய கட்டடங்கள் கூட்டமைப்பு இணைந்து, இந்திய கட்டடங்கள் கூட்டமைப்பின், ஐந்தாவது செயற்குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கை, சென்னையில் நடத்தின. இதில், அமைச்சர் வேலு பேசியதாவது:இன்றைய உலகை வடிவமைக்கும், மிக சக்தி வாய்ந்தவற்றில் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமானது. இந்த வளர்ச்சி, குறைந்த நேரத்தில் அதிகம் சாதிப்பதை சாத்தியமாக்கி உள்ளது. புதிய கட்டடங்களை கட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புகளை, மக்கள் பயன்பாட்டிற்கு, நவீன தொழில்நுட்ப கட்டுமான பொருட்களை பயன்படுத்தி, எதிர்வரும் காலங்களில் செயல்படுத்த வேண்டும். கட்டுமானங்களை பொறுத்தவரை, திட்டமிட்டபடி முடிக்க வேண்டும். இதை பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்த செலவு, நிறைந்த தரம், கட்டட தோற்றப் பொலிவு, நீண்ட கால பயன்பாடு போன்றவை, கட்டுமானத்தின் முக்கிய அம்சங்களாக கவனிக்க வேண்டியவை. இவற்றை பொறியாளர்கள் முறையாக திட்டமிட்டு, உரிய அனுமதிகளை அரசிடம் பெற்று, பணிகளை துவக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் தரம் குறித்து, ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்து, பயன்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை அனைத்து கட்டுமான பணிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும். தாமதமாக பணிகள் முடித்தால், கட்டுமான செலவு உயர்ந்து விடும். கட்டுமான பணிகளில் தரத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். '3டி டெக்னாலஜி' பயன்படுத்தி கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை